சேது விரைவு வண்டி (Sethu Superfast Express) என்பது இந்திய ரயில்வேயின், தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் ஓர் அதிவிரைவுத் தொடர் வண்டியாகும். இது சென்னை எழும்பூர் முதல் ராமேஸ்வரம் வரை இயக்கப்படுகிறது. இது 22 ரயில் பெட்டிகள் கொண்ட ஒரு தினசரி தொடர் வண்டியாகும். இந்த இரயில் சராசரியாக 601 கி. மீ (374 மைல்) தூரத்தை 11 மணி நேரத்தில் கடக்கிறது.இது இந்திய ரயில்வேயின் தெற்கு மண்டல ரயில்சேவைகளுள் ஒன்றாகும்.
சொற்பிறப்பு
18 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டின், இராமநாதபுரம் சமஸ்தானத்தின் "சேதுபதி" என்ற மன்னரை பெருமைப்படுத்தும் விதமாக இந்த வண்டிக்கு சேது அதிவிரைவு வண்டி என பெயரிடப்பட்டது.
வழித்தடம்
சேது அதிவிரைவு வண்டி சென்னையிலிருந்து, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக இராமேஸ்வரம் சென்றடைகிறது. திருச்சிராப்பள்ளி முதல் தாம்பரம் வரை, இந்த ரயில் அதிகபட்சமாக 120km/h எனும் வேகத்தில் செல்கிறது.
வண்டி எண்
22661 – சென்னை எழும்பூரில் தினசரி மாலை 17மணி 45நிமிடங்களுக்கு புறப்பட்டு மறுநாள் காலை 04மணி 10நிமிடங்களுக்கு ராமேஸ்வரத்தை சென்றடைகிறது. [1]
22662 – மறுமார்கமாக இரவு 20மணி 20நிமிடங்களுக்கு இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07மணி 10நிமிடங்களுக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.[2]
வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரமும்
22661 ~ சென்னை எழும்பூர் → இராமேஸ்வரம் ~ சேது அதிவிரைவு வண்டி
சேது அதிவிரைவு வண்டி சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை WAP-4 எனும் 5350HP திறன் கொண்ட மின்சார இழுவை இயந்திரம் மூலம் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து இராமேஸ்வரம் வரை WDM-3D எனும் அதிக சக்கிவாய்ந்த டீசல் இழுவை இயந்திரம் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது.
பெட்டி வரிசை
இந்த வண்டியில் மொத்தம் 23 பெட்டிகள் உள்ளன. அவற்றுள் குளிர்சாதன முதல் வகுப்பு மற்றும் உரண்டாம் வகுப்பு பெட்டி (HA), குளிர்சாதன இரண்டாம் வகுப்பு பெட்டி (A), குளிர்சாதன மூன்றாம் வகுப்பு பெட்டிகள் (B), குளிர்சாதனம் இல்லாத படுக்கை வசதி பெட்டிகள் (SL), முன்பதிவற்ற பொதுபெட்டிகள் (GS) மற்றும் சாமான், மகளிர், கார்டு பெட்டிகள் (SLRD).