சிலம்பு விரைவுத் தொடருந்து
சிலம்பு விரைவுத் தொடர்வண்டி (Silambu Express) (16181 / 16182) என்பது சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டை வரைச் செல்லும் ஓர் விரைவுத் தொடர்வண்டி ஆகும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை,அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், தென்காசி ஆகியவை இதன் முக்கிய வழித்தடமாகும். இத்தொடர்வண்டியானது 683 கி.மீ தூரத்தை, 14 மணி நேரங்களில் கடக்கிறது. வரலாறு
பெயர் காரணம்
பயண நேரங்கள்இவ்வண்டியானது வாரம் மூன்று முறை செயல்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை வரை செல்லும் நேரமானது சென்னையிலிருந்து இரவு 08 மணி 20 நிமிடங்களுக்கு புறப்படும் இரயிலானது இரவு 02 மணி 10 நிமிடங்களுக்கு திருச்சியைச் சென்றடைந்து, பின்னர் மறுநாள் காலை 09 மணி 25 நிமிடங்களுக்கு செங்கோட்டையைச் சென்றடைகிறது. இதன் பயண நேரம் ஏறக்குறைய 13 மணி 30 நிமிட நேரம் ஆகும். இந்த இரயில் செல்லும் நாட்கள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்கள் ஆகும். பின்னர் செங்கோட்டை முதல் சென்னைக்கு திரும்பி வரும் நேரமானது செங்கோட்டையில் மாலை 04 மணிக்கு புறப்படும் இரயிலானது இரவு 11 மணி 40 நிமிடங்களுக்கு திருச்சியை வந்தடைந்து, பின்னர் மறுநாள் காலை 5 மணி 35 நிமிடங்களுக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. இதன் பயண நேரம் ஏறக்குறைய 14 மணி நேரம் ஆகும். இந்த இரயில் திரும்பும் நாட்கள் செவ்வாய்,வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் ஆகும். பெட்டிகளின் விவரம்இவ்வண்டியில் மொத்தம் 17 பெட்டிகள் உள்ளன.
நிறுத்தங்கள்இவ்வண்டியானது மொத்தம் 26 இடங்களில் நின்று செல்கின்றது (புறப்படும் இடம் மற்றும் போய்ச் சேரும் இடத்தையும் சேர்த்து) சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை வரை உள்ள நிறுத்தங்கள்.
செங்கோட்டை முதல் சென்னை எழும்பூர் வரை உள்ள நிறுத்தங்கள்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia