படகுமெயில் விரைவுத் தொடருந்துபோட்மெயில் எக்ஸ்பிரஸ் இந்திய – இலங்கை எக்ஸ்பிரஸ் எனவும் அறியப்படும் விரைவு ரயில் சேவையாகும். இது தென்னிந்திய ரயில்வேயினால் செயல்படுத்தப்படும் ரயில்சேவை. இது முதலில் சென்னை எழும்பூர் முதல் தனுஷ்கோடி வரை செயல்பட்டது. தற்போது சென்னை எழும்பூர் முதல் இராமேஸ்வரம் வரை செயல்படுகிறது. இந்த வழித்தடத்தினில் உள்ள திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களை முக்கிய நிறுத்தங்களாகக் கொண்டுள்ளது. 19 ரயில் பெட்டிகள் கொண்ட இந்த ரயில் சேவை தினசரி செயல்படும் ரயில் சேவையாகும். இந்திய ரயில்வேயின் பெருமைக்குரிய ரயில் சேவைகளில் இதுவும் ஒன்று. கடந்த 2014 ஆம் ஆண்டின் மூலம், தனது நூறு ஆண்டு ரயில் சேவையினை போட்மெயில் ரயில் சேவை பூர்த்தி செய்துள்ளது.[1] வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்
வண்டி எண் 16701இது சென்னை எழும்பூரில் இருந்து, இராமேஸ்வரம் வரை செயல்படுகிறது. 14 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 22 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 47 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 667 கிலோ மீட்டர் தொலைவினை 14 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்களில் கடக்கிறது. இது சென்னை எழும்பூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 122 ரயில் நிறுத்தங்களில் 22 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது.[3] வண்டி எண் 16702இது இராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரை செயல்படுகிறது. 13 மணி நேரம் 30 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 23 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 49 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 667 கிலோ மீட்டர் தொலைவினை 13 மணி நேரம் 30 நிமிடங்களில் கடக்கிறது. இராமேஸ்வரம் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 122 ரயில் நிறுத்தங்களில் 23 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்திலும், சென்றடையும் நேரத்திலும் கிட்டத்தட்ட சரியாக சென்றடையும்படி செயல்பட்டு வருகிறது.[4] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia