வைகை அதிவேக விரைவு வண்டி
வைகை அதிவேக விரைவுத் தொடருந்து மதுரை, சென்னை எழும்பூர் இடையே இயங்கும் அதிவிரைவு தொடர்வண்டியாகும். இது திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழிச்செல்லும். 496கி.மீ தூரத்தை 7 மணி 50 நிமிடங்களில் கடக்கிறது. தனது முதல் பயணத்தை ஆகஸ்ட் 15, 1977ல் தொடங்கி பிப்ரவரி 20, 1998 வரை குறுகிய வழிப் பாதையில் இயங்கிக் கொண்டிருந்தது. தற்பொழுது அகலப்பாதையில் இயங்குகிறது. வரலாறு![]() வைகை அதிவிரைவு வண்டி மதுரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே 493 கிலோமீட்டர்கள் (306 mi) தூரத்தை முதல் நாளில் 7 மணி நேரம் 5 நிமிடங்களில் அதிவேகமாக இயக்கியது, அது சென்னை எழும்பூர் மதியம் 1.05 மணிக்கு நுழைந்தது. அன்று மதியம், SR இல் உள்ள பல பிராட் கேஜ் அதிவிரைவு ரயில்களின் வேகத்தை பொருத்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில் 7 மணி நேரம் 40 நிமிடங்களுக்குப் பிறகு பயண நேரம் குறைக்கப்பட்டது. அந்த நேரத்தில் ரயிலுக்கு மூன்று நிறுத்தங்கள் மட்டுமே இருந்தன, அவை விழுப்புரம் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு மற்றும் திண்டுக்கல் சந்திப்பு. பின்னர் மக்களின் கோரிக்கையை ஏற்று நிறுத்தங்கள் அதிகரிக்கப்பட்டன. 1999 முதல், வைகை எக்ஸ்பிரஸ் மீட்டர் கேஜிலிருந்து அகலப்பாதையாக மாற்றப்பட்டு பொன்மலை அகலப்பாதை டீசல் இன்ஜின்களால் இழுத்துச் செல்லப்பட்டது. பிப்ரவரி 2014 முதல், வைகை எக்ஸ்பிரஸ் மின்சார இன்ஜின் WAP-4 மூலம் அரக்கோணம் & ஈரோடு லோகோ ஷெட் & WAP-7 மூலம் ராயபுரம் லோகோ ஷெட்டில் இருந்து மதுரையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இழுத்துச் செல்லப்படுகிறது. குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்![]() * 1977 ஆகஸ்ட் 15இல் தொடங்கிவைக்கப்பட்டபோது இந்தியாவில் மீட்டர் பாதையில் வேகமாகச் செல்லும் வண்டிகளில் வைகைக்கே முதலிடம். தொடக்கநாள் ஓட்டத்தில் 495 கி.மீ. தூரத்தை 7 மணி 5 நிமிடங்களில் ஓடிக்கடந்தது. (பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக பயணநேரம் 7 மணி 40 நிமிடங்களாகக் கூட்டப்பட்டது). தென்னக இரயில்வேயில் மீட்டர் பாதையில் மணிக்கு 100கி.மீ. வேகத்தை எட்டிய முதல் வண்டி வைகையே ஆகும். * 1994இல் குளிரூட்டப்பட்ட, இருக்கைவசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டன. இந்தியாவில் மீட்டர் பாதை வண்டிகளில் அத்தகைய வசதிகொண்ட முதல் வண்டி வைகையேயாகும். * 1995இல் சென்னை - விழுப்புரம் இடையே மின்சார எஞ்சின் அறிமுகப்படுத்தப்பட்டது. * 1997: மீட்டர் பாதை அகலப்பாதையாக மாற்றப்படுவதற்காக வண்டி நிறுத்தப்பட்டது. * 1998: அகலப்பாதையில் 16 பெட்டிகள், டீசல் எஞ்சினுடன் மீண்டும் பயணத்தைத் தொடங்கியது. * 2003: சென்னை - விழுப்புரம் இடையே அகலப்பாதை மின்மயமானதால் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டது. * 2006: பெட்டிகள் இருபத்து நான்காக அதிகரிக்கப்பட்டன. * 2008: திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை மின்சார எஞ்சின் பயன்படுத்த முடிந்தது. * 2014: சென்னை - மதுரை இடையே முழு தூரமும் மின்சார எஞ்சினால் இயக்கமுடிந்தது. * 2018: சென்னை - மதுரை இடையே இரட்டை வழித்தடப் பணிகள் நிறைவுற்றன. பயணநேரம் 7 மணி 35 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. இந்தியாவில் இரு நகரங்களுக்கிடையே ஓடும் வண்டிகளில் வைகையே வெகுவேகமானது என்றானது. * 2019: வைகை அதிவிரைவுத் தொடர்வண்டியில் எல். எச். பி இரக பெட்டிகள் பொருத்தப்பட்டன. * 2022: பயணநேரம் 7 மணி 25 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. இவ்வேகம் சதாப்தி வண்டிகளுக்கு இணையானதாகும். மார்ச் 3, 2022 அன்று 6 மணி 43 நிமிடங்களில் மதுரையிலிருந்து சென்னை எழும்பூரை அடைந்தது. இது ஒரு புதிய சாதனை. இவ்வேகம் தேஜஸ், ராஜ்தானி, துரந்தோ போன்ற வண்டிகளுக்கு இணையான வேகமாகும். ![]() கால அட்டவணை![]()
![]() பெட்டி
எஞ்ஜின்வைகை அதிவேக விரைவு வண்டி சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இருமார்க்கத்திலும் WAP-7 எனப்படும் 6350HP திறன் கொண்ட அதிவேக மின்சார எஞ்ஜின் கொண்டு இயக்கப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia