திருநெல்வேலி சென்னை எழும்பூர் - வந்தே பாரத் விரைவு வண்டி
திருநெல்வேலி சென்னை எழும்பூர் - வந்தே பாரத் விரைவு வண்டி (Chennai Egmore - Tirunelveli Vande Bharat Express) என்பது இந்தியாவின் 28வது வந்தே பாரத் விரைவுவண்டி ஆகும். இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் பயன்படும் வகையில் திருநெல்வேலி சென்னை நகரங்களை இணைத்து திருநெல்வேலியில் நிறுத்தப்பட்டுச் செயல்படுகிறது.[1] இந்த தொடருந்தினை 24 செப்டம்பர் 2023 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி புது தில்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.[2][3][4][5] இந்த தொடருந்து திருநெல்வேலியில் காலை 06.00 மணிக்குக் கிளம்பி விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் ஆகிய தொடருந்து நிலையங்களில் நின்று சென்னை எழும்பூரை மதியம் 13.50க்குச் சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 14.50க்குப் புறப்பட்டு விழுப்புரம்,திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாகத் திருநெல்வேலியினை இரவு 22.40க்கு சென்றடையும். இந்த தொடருந்து 20665/20666 என்ற எண்களுடன் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது.[6][7][8][9] பெட்டிகள்இது இருபத்தி ஆறாவது 2வது தலைமுறை மற்றும் பதினான்காவது வந்தே பாரத் 2.0 தொடருந்து ஆகும். இது இந்தியாவின் தயாரிப்பு திட்டத்தின் முன்முயற்சியின் கீழ் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது.[10][11] பெட்டிகளமைப்பு20665/20666 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் விரைவுத் தொடருந்து தற்போது குளிரூட்டப்பட்ட 7 அமரும் வசதிகொண்ட பெட்டிகளுடன் 1 சிறப்பு குளிரூட்டப்பட்ட உட்காரும் வசதி கொண்ட பெட்டியுடன் இயக்கப்படுகிறது.
சேவை20665/20666 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் தொடருந்து செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இது 650 km (404 mi) தூரத்தினை சராசரி வேகமான 83 கி.மீ./மணியுடன் 7 மணி 50 நிமிட பயண நேரத்தில் சென்றடையும். அதிகபட்ச அனுமதிக்கக்கூடிய வேகம் (மணிக்கு 110 கி. மீ. ஆகும்.
பயண விவர அட்டவணைஇந்த 20665/20666 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் தொடருந்தின் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:-
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia