மன்னார்குடி தொடருந்து நிலையம்
மன்னார்குடி தொடருந்து சந்திப்பு நிலையம் (Mannargudi railway station, நிலையக் குறியீடு:MQ) ஆனது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். அமைவிடம்மன்னார்குடியில் மன்னை நகரில் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதற்கு அருகில் மன்னார்குடி பேருந்து பணிமனை உள்ளது. மன்னார்குடி தொடருந்து நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் உள்ள தொலைவு 86 கி.மீ ஆகும். திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[2][3][4][5][6] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன,மன்னார்குடி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 4.69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10] இணைக்கும் தொடருந்து நிலையங்கள்சென்னை எழும்பூர், திருப்பதி, ஜோத்பூர் சந்திப்பு, ஜெய்ப்பூர் சந்திப்பு, மானாமதுரை சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, புதுக்கோட்டை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு போன்றவை ஆகும். முக்கிய தொடருந்துகள்மன்னார்குடி தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் சில முக்கியமான தொடருந்துகளின் பட்டியல்:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia