முத்துநகர் அதிவேக விரைவு வண்டி
முத்துநகர் (பேர்ல் சிட்டி) அதிவேக விரைவுவண்டி Pearl City (Muthunagar) Superfast Express (12693/12694) என்பது என்பது சென்னை எழும்பூரிலிருந்து தூத்துக்குடி வரைச் செல்லும் ஓரு அதிவேக விரைவுத் தொடர்வண்டி ஆகும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகியவை இதன் முக்கிய வழித்தடமாகும். இத்தொடர்வண்டியானது 652 கி.மீ தூரத்தை, 11 மணி 05 நிமிடங்களில் கடக்கிறது. இது ஒரு இரவு நேரப் பயண தொடர்வண்டி ஆகும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 12694 தூத்துக்குடி தொடருந்து நிலையத்திலிருந்து இரவு 08 மணி 15 நிமிடங்களுக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 07:35 மணிக்கு சென்னையை அடைகிறது. இது தெற்கு இரயில்வேயின் குறிப்பிடத்தக்க வண்டிகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் பழமையான பயணிகள் தொடருந்து ஆகும். இந்தத் தொடருந்தின் முக்கியமான நிறுத்தங்கள் மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் ஆகும். இது 21 பெட்டிகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொடருந்து ED/WAP7 எனும் 6350HP திறன் கொண்ட எஞ்சினால் இயக்கப்படுகின்றது.[1] கால அட்டவணை
பெட்டிகளின் வரிசைஇந்த வண்டியில் மொத்தம் 21 பெட்டிகள் உள்ளன.
படக் காட்சியகம்
சுழலிருப்புவெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia