தங்கசேரி கலங்கரை விளக்கம்
தங்கசேரி கலங்கரை விளக்கம் (Tangasseri Lighthouse) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பெருநகரப் பகுதியில் தங்கசேரியில் அமைந்துள்ள இரண்டு கலங்கரை விளக்கங்களுள் ஒன்றாகும். கொல்லம் மாநகராட்சி மற்றும் கொல்லம் கலங்கரை விளக்கப் பொது இயக்ககம் தங்கசேரி கலங்கரை விளக்கத்தைப் பராமரிக்கிறது[4][5]. 41 மீட்டர் உயரத்துடன் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் சாய்ந்த பட்டைகள் வரையப்பட்ட உருளையான இக் கோபுரம் 1902 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது[6]. கேரள கடற்கரையில் அமைந்துள்ள இரண்டாவது மிக உயர்ந்த கலங்கரை விளக்கமாகவும்[7] கேரளாவில் அதிகமாகப் பார்வையிடப்பட்ட கலங்கரை விளக்கமாகவும் இது கருதப்படுகிறது[8]. வரலாறுகலங்கரை விளக்கத்தை உருவாக்குவதற்கு முன்பு, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் ஒரு எண்ணெய் விளக்கு கொண்ட கோபுரத்தை நிறுவியிருந்தது. 1902 ஆம் ஆண்டில் அவர்கள் தங்காசேரி கலங்கரை விளக்கை கட்டியெழுப்பினர், 1930 ஆம் ஆண்டில் கோபுரத்தின் மீது விரிசல் ஏற்பட்டது பின்பு அது சரிசெய்யப்பட்டது. 1932, 1940, 1962, 1967, 1990 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இந்த ஒளி மூலம் புதுப்பிக்கப்பட்டது[9]. 2016 ஆம் ஆண்டு முதல் பார்வையாளர்களின் வசதிக்காக இங்கு மின் தூக்கி வசதியும் ஏற்படுத்தப்பட்டது[10]. இருப்பிடம்கேரளாவின் கொல்லம் நகரத்தில் உள்ள தங்கசேரி கடற்கரையில் இந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது. இந்தியாவில் ஆங்கிலோ-இந்திய கலாச்சாரம் இன்னும் பராமரிக்கப்படும் ஒரே இடமாக இது உள்ளது. பழங்கால போர்த்துகீசிய கட்டிடக் கலையின் மிச்சங்களாக இங்கு கரையோரப் பாதுகாப்பு அறண், புனித தாமசு கோட்டை, போர்த்துகீசிய கல்லறை, ஒரு கால்வாய், பழங்காலக் கொல்லம் துறைமுகம், மற்றும் குழந்தை இயேசு ஆலயம் போன்ரவை உள்ளன[11][12][13]. திங்கட் கிழமை தவிர்த்து இதர வார நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்[14]. படக்காட்சியகம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia