சடாயு இயற்கை பூங்கா
சடாயு இயற்கை பூங்கா (சடாயு உலகத்தின் மையம் அல்லது சடாயு பாறை என்றும் அழைக்கப்படுகிறது) கேரளாவின் கொல்லம் மாவட்டத்தின் சடயமங்கலத்தில் உள்ள ஒரு பூங்கா மற்றும் சுற்றுலா மையமாகும். இராமாயணத்தில் வரும் கழுகு வடிவான கதாப்பாத்திரமான சடாயுவின் சிற்பம் இங்கு உள்ளது. இது உலகின் மிகப் பெரிய பறவை சிற்பம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது.[3][4][5][6] 2019 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த சிலை 61 மீட்டர்கள் (200 அடி) நீளம், 46 மீட்டர்கள் (151 அடி) அகலம், 21 மீட்டர்கள் (69 அடி) உயரம் மற்றும் 1,400 சதுர மீட்டர்கள் (15,000 sq ft) தரை பரப்பளவைக் கொண்டுள்ளது. ராமாயணம் என்ற இந்து மதக் காவியக் கதையில் கூறப்படும் முக்கியத்துவம் வாய்ந்த பறவையான சடாயுவின் சிற்பம் இது.[7][8] சடாயு விசுவாசத்தையும் பாதுகாப்பையும் குறிக்கிறது. இந்த சிற்பமும் பெண்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia