காப்பாடு
![]()
எம். ஜி. எஸ். நாராயணன் காப்பாடு (Kappad - மலையாளம்: കാപ്പാട്) இந்தியாவின், கேரள மாநிலத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர கிராமம். இங்கு 2007 இல் ரூபாய் 1.5-கோடியில் கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் கொடிவேரி பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். இந்த கிராமம் வரலாற்று சிறப்பு மிக்கது. மாபெரும் மாலுமியான வாஸ்கோ ட காமா மூன்று பெரிய கப்பல்களில், 170 மாலுமிகளோடு, கி.பி. 1498 ஆம் ஆண்டு மே 27 அன்று முதல்முதலாக இந்தியத் துணைக்கண்டக் கரையில் கால்பதித்த இடம் இதுவாகும். இதற்கான நினைவுச் சின்னம் இங்கே பாதுகாக்கபட்டுவருகிறது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை உள்ளதுபோல் கப்பாடு பகுதியிலும் ஒரு பாறை கடலிது துருத்திக்கொண்டு உள்ளது. இந்த கிராமம் கோழிக்கோட்டிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. நீலக்கொடி கடற்கரைஇக்கடற்கரை பன்னாட்டு சுற்றுசூழல் அறக்கட்டளையிடமிருந்து நீலக்கொடி கடற்கரை எனும் விருது பெற்றுள்ளது.[4] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia