தூவானம் அருவி

தூவானம் அருவி (Thuvanam Waterfalls) கேரள மாநிலத்தின் சின்னார் கானுயிர்க் காப்பகத்தில் அமைந்துள்ளது [1]. இந்த அருவியானது உடுமலைப்பேட்டை மற்றும் மறையூரை இணைக்கும் நெடுஞ்சாலையில் இருந்து பார்த்தால் தெரியும்.

மலையேறுவதற்கு இந்த அருவி ஒரு பொருத்தமான இடமாகக் கருதப்படுகிறது. மூணார் நகரத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

சின்னார் சரணாலயத்திற்கு மிகவும் உட்புறமாக தூவானம் அருவி அமைந்திருக்கின்றது. எனவே அருவிக்கு செல்லும் வழிகளிலெல்லாம் கேரளாவின் மற்ற பகுதிகளில் காண முடியாத வன விலங்குகள் மற்றும் வனத் தாவரங்கள் முதலியவற்றை இரசிப்பதற்கு சிறந்த இடமாக இச்சரணாலயம் திகழ்கிறது.

மேற்கோள்கள்

  1. "Thuvanam Waterfalls, Munnar".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya