விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம்
விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம் (மலையாளம் : വിഴിഞ്ഞം വിളക്കുമാടം) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், கோவளம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கமாகும். இது 30 சூன் 1972-இல் செயல்படத் தொடங்கியது. விழிஞ்ஞம் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பரபரப்பான துறைமுகமாக இருந்தது. தற்போதைய கலங்கரை விளக்கம் நிறுவப்படுவதற்கு முன்பு, இந்த இடத்தில் கலங்கரை விளக்கங்கள் எதுவும் இருக்கவில்லை. ஒரு காலத்தில் தொலை அடையாளக் குறி (கொடிக் கம்பம்) 18-ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க வேண்டும். 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, இந்த துறைமுகம் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அருகிலுள்ள குளச்சலில் 1925-இல் ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. பின்னர், 1960-ஆம் ஆண்டில் விழிஞ்ஞத்தில் ஒரு தொலை அடையாளக் குறி அமைக்கபட்டது. [2] தொழில்நுட்ப விவரங்கள்இந்த கலங்கர விளக்க கோபுரம் உருளை வடிவில் 36 மீட்டர் உயரத்துடன் உள்ளது. இதன்மேல் வண்ணப்பூச்சு அடையாளங்களாக சிவப்பு மற்றும் வெள்ளை பட்டைகள் வரையபட்டுள்ளன. கலங்கரை விளக்கத்தில் உலோக உப்பீனிய விளக்கு மற்றும் நர்திசை ஒட்டி பொறிமுறை பொருத்தப்பட்டுள்ளது. [3] 30 ஏப்ரல் 2003 இல் ஒளியூற்று மாற்றப்பட்டது. மேலும் காண்ககுறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia