தீன் தயாள் ஏழைக் குடும்பங்களின் பாதுகாப்பு திட்டம்

தீன் தயாள் ஏழைக் குடும்பங்களின் பாதுகாப்பு திட்டம் (Deen Dayal Upadhyaya Antyodaya Parivar Suraksha Yojana) சுருக்கமாக:(DAY-PSY), இந்திய அரசால் 1 ஏப்ரல் 2023 அன்று இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் திட்டம். இத்திட்டத்தின் நோக்கம் ஏழைக் குடும்ப உறுப்பினர் இறக்கும்போதோ அல்லது விபத்தில் நிரந்தரமாக உடல் ஊனம் அடைந்தவர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி இறப்பு அல்லது நிரந்தர ஊனத்தின் போது தனிநபரின் வயதைப் பொறுத்து மாறுபடும். 6 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 60 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே இத்திடத்தில் நிதியுதவி பெற தகுதியுடையவர்கள்.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பெறப்பட்ட தொகையுடன் சேர்த்து இந்தி நிதியுதவி கூடுதலாக வழங்கப்படும்.

நோக்கம்

ஏழைக் குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் அவர்களின் நிதி நிலையை மேம்படுத்துதல்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு ஏழைக் குடும்ப உறுப்பினரின் மரணம் (இயற்கையாகவோ அல்லது விபத்த்தில்) அல்லது விபத்தால் ஏற்படும் நிரந்தர ஊனம் அடைந்தவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

நிதி பெறத் தகுதி

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 1.80 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

வழங்கப்படும் நிதி உதவி

6 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.1 இலட்சம். 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சம். 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம். 25 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம். 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சம்.

தேவையான ஆவணங்கள்

இந்தத் திட்டத்தின் நிதிப்பலன்களைப் பெற, குடும்ப உறுப்பினர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya