தீன் தயாள் உபாத்யாய கிராமீன் கௌசல்யா யோஜனா
தீன் தயாள் உபாத்யாய கிராமீன் கௌசல்யா யோஜனா (Grameen Kaushalya Yojana) (சுருக்கமாக: DDU-GKY) இந்திய அரசின் இளைஞர் வேலைவாய்ப்பு திட்டமாகும்.[1][2] இத்திட்டம் மறைந்த தலைவர் தீனதயாள் உபாத்தியாயாவின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு 25 செப்டம்பர் 2014 அன்று சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.[3] இத்திட்டத்தின் நோக்கம் கிராமப்புறங்களில் வாழும் 15 முதல் 35 வயது வரை உள்ள ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது ஆகும். இத்திட்டம் தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (National Rural Livelihood Mission-NRLM) ஒரு பகுதியாக செயல்படுகிறது. கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்திற்கு இந்திய அரசு ரூபாய் 1,500 கோடி தொகுப்பு நிதியாக ஒதுக்கியுள்ளது.[4][5][6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia