மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு (மலாய்: Kementerian Komunikasi dan Digital Malaysia; ஆங்கிலம்: Ministry of Communications and Digital of Malaysia) (KKD) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.
முன்பு இந்த அமைச்சு, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சு (Ministry of Communications and Multimedia of Malaysia) என்று அழைக்கப்பட்டது. மலேசியப் பிரதமர்டத்தோ ஸ்ரீஅன்வார் இப்ராகிம், 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு எனும் புதிய பெயரில் இப்போதைய அமைச்சை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
பொறுப்பு துறைகள்
இலக்கவியல் மயமாக்கல் (Digitalisation)
தகவல் தொடர்பு (Communications)
பல்லூடகம் (Multimedia)
வானொலி ஒலிபரப்பு (Radio Broadcasting)
ஊடக ஒளிபரப்பு (Media Broadcasts)
தகவல் (Information)
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு (Personal Data Protection)
சிறப்பு விவகாரங்கள் (Special Affairs)
ஊடகத் துறை (Media Industry)
திரைப்படத் துறை (Film Industry)
இணையக் களப் பெயர் (Domain Name)
அஞ்சல் (Postal)
விரைவு அஞ்சலர் (Courier)
அலைபேசி சேவை (Mobile Service)
நிலையான சேவை (Fixed Service)
அகண்ட அலைவரிசை (Broadband)
உலகளாவிய சேவை (Universal Service)
பன்னாட்டு ஒளிபரப்பு (International Broadcasting)
உள்ளடக்கம் (Content)
தரைத்தள இலக்கவியல் தொலைக்காட்சி ஒளிபரப்பு (Digital Terrestrial Television Broadcasting)
அமைப்பு
தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர்
தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் துணை அமைச்சர்
பொது செயலாளர்
பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
சட்ட ஆலோசகர் அலுவலகம்
நிறுமத் தொடர்பு பிரிவு
உள் தணிக்கை பிரிவு
முக்கிய செயல்திறன் காட்டி அலகு
ஒருமைப்பாடு அலகு
துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை)
உத்திசார் திட்டமிடல் பிரிவு
தகவல் தொடர்பு தொழில்நுட்ப பிரிவு
பன்னாட்டு பிரிவு
உள்ளடக்க மேம்பாட்டு பிரிவு
துணைப் பொதுச் செயலாளர் (செயல்பாடுகள்)
உத்திசார் தொடர்பு பிரிவு
கட்டுப்பாடு மற்றும் இணக்கப் பிரிவு
உள்கட்டமைப்பு மற்றும் விண்ணப்பப் பிரிவு
வெளிநாட்டு கலைஞர் (PUSPAL) பிரிவின் மூலம் படப்பிடிப்பு மற்றும் நடிப்பு விண்ணப்பத்திற்கான மத்திய முகவர் குழு