பெக்கான் மக்களவைத் தொகுதி
பெக்கான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pekan; ஆங்கிலம்: Pekan Federal Constituency; சீனம்: 北根国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், பெக்கான் மாவட்டம் (Pekan District); குவாந்தான் மாவட்டம் (Kuantan District) ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P085) ஆகும்.[5] பெக்கான் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1959-ஆம் ஆண்டில் இருந்து பெக்கான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] பெக்கான் மாவட்டம்பெக்கான் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் பெக்கான். இந்த மாவட்டத்தின் வடக்கில் குவாந்தான் மாவட்டம், கிழக்கில் தென் சீனக் கடல், மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் தெற்கில் ரொம்பின் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன. பெக்கான் நகரின் பழைய பெயர் இந்திராபுரா. இந்தியாவில் இருந்து வந்த இந்திய வணிகர்கள் இந்திராபுரா (இந்திரபுரம்) என்று அழைத்தனர். பெக்கான் நகரத்தின் அசல் பெயர் பூங்கா பெக்கான் (Bunga Pekan). பூங்கா பெக்கான் எனும் மலரின் பெயரில் இருந்து வந்தது. இங்கு பகாங் சுல்தானின் அரண்மனையும், அரச பள்ளிவாசலும் உள்ளன. பெக்கான் மக்களவைத் தொகுதி
பெக்கான் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia