பக்மின்ஸ்டர்ஃபுலரின்
பக்மின்ஸ்டர்ஃபுலரின் என்பது C60ஐ வாய்ப்பாடாகக் கொண்ட ஒரு புலரின் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூறு ஒரு காற்பந்தைப் போன்ற கூண்டாகத் தோற்றமளிக்கும். இம்மூலக்கூறில் இருபது அறுகோணிகளும் பன்னிரண்டு ஐங்கோணிகளும் இருக்கும். இவற்றின் மூலைகளில் ஒவ்வொரு கார்பன் அணு காணப்படும். இதனை ஹரோல்ட் குரோடோ, ஜேம்ஸ்.ஆர்.ஹீத், சீன் ஓ பிரையன், ரொபர்ட் கேர்ல் மற்றும் ரிச்சர்ட் ஸ்மல்லி ஆகியோர் 1985 ஆம் ஆண்டு ரைஸ் பல்கலைக்கழகத்தில் உருவாக்கினர். இதற்காக குரோடோ, கேர்ல் மற்றும் ஸ்மல்லி ஆகியோருக்கு 1996ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. இதுவே இயற்கையில் அதிகமாகக் காணப்படும் புலரீன் மூலக்கூறாகும். ஏனெனில் இதனை அடுப்புக் கரியில் அவதானிக்க முடியும். இதன் கண்டறிதலானது வேதியியலில் புலரின் பற்றிய ஆய்வுகளுக்கு வித்திட்டது. பெயரீடுஇதன் பெயரானது கண்டுபிடிப்பாளரும் எதிர்காலத்தைப் பற்றி விவரிப்பவருமான பக்மின்ஸ்டர் புலருக்கு கௌரவம் அளிக்கும் முகமாக இடப்பட்டுள்ளது. உருவாக்கல்1990ஆம் ஆண்டு W.கிராட்ச்மர் மற்றும் D. R. ஹஃப்மான் ஆகியோர் பெருமளவில் பக்மின்ஸ்டர்ஃபுலரினை உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தனர்; இதனால் கிலோகிராம் அளவுகளிலும் இதனை உருவாக்க முடிந்தது. ஹீலிய வாயுச் சுற்றுச்சூழலில் தூய காரீய மின்முனைகள் மூலம் பெறப்படும் கரியிலிருந்து இம்முறை மூலம் பக்மின்ஸ்டர்ஃபுலரின் உருவாக்கப்பட்டது. இவ்வாறு பெறப்படும் கரியை கரிம சேர்வையில் கலக்கும் போது 75% C60 ஐப் பெற முடியும். பயன்பாடு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia