அம்மோனியம் அசிட்டேட்டை வெப்பப்படுத்தி நீர் அகற்றுவதன் மூலமாக அசிட்டமைடு சேர்மத்தை தயாரிக்கலாம்.[3]
CH3COONH4 → CH3C(O)NH2 + H2O
அசிட்டைல் அசிட்டோனை அமைனாக்கலின் போதுள்ள நிபந்தனைகளின்படி அம்மோனியாவாக்கல் வினைக்குட்படுத்தினால் அசிட்டமைடை அதிக அளவில் ஆய்வகத்தில் தயாரிக்கலாம்[4].
தொழிற்துறை தயாரிப்பு
சில ஆய்வக முறைகளில் தயாரிக்கப்பட்டது போலவே அம்மோனியம் அசிட்டேட்டை நீர்நீக்கம் செய்து அல்லது அசிட்டோநைட்ரைலைநீராற்பகுத்து பெருமளவில் அசிட்டமைடு தயாரிக்கப்படுகிறது. அசிட்டோ நைட்ரைல், அக்ரைலோ நைட்ரைல் தயாரிக்கும் போது கிடைக்கும் உடன் விளை பொருளாகும் [2]
CH3CN + H2O → CH3C(O)NH2
பயன்
தையோ அசிட்டமைடு தயாரிப்புக்கு ஒரு முன்னோடியாக அசிட்டமைடு இருக்கிறது.
தோற்றம்
பால் வெளிவிண்மீன் திறள்[5] மையத்திற்கு அருகே அசிட்டமைடு நிறைந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், புரதங்களில் காணப்படும் அமினோ அமிலங்களில் உள்ள அத்தியாவசியமான பிணைப்பைப் போல்வே அசிட்டமைடிலுள்ள அமைடு பிணைப்புகளும் காணப்படுகின்றன. உயிர் வாழ்வதற்கு கரிம மூலக்கூறுகளே அடிப்படையாகின்றன என்ற கோட்பாடு பூமியில் நாம் அறிந்திருக்கிறோம். பால்வெளியில் கரிம மூலக்கூறான அசிட்டமைடின் கண்டுபிடிப்பு அங்கும் வாழும் சூழலை ஏற்படுத்தலாம் என்ற கருத்துக்கு நம்பிக்கையை வழங்கியிருக்கிறது.
எப்போதாவது பற்றி எரியும் நிலக்கரி கழிவுகளில் அசிட்டமைடு இதே பெயரில் தாதுவாக காணப்படுவது கூடுதல் ஆதாரமாகும்.[6][7]
↑Schwoegler, Edward J.; Adkins, Homer (1939). "Preparation of Certain Amines". Journal of the American Chemical Society61 (12): 3499-3502. doi:10.1021/ja01267a081.