அமினோ அசிட்டோ நைட்ரைல்
அமினோ அசிட்டோ நைட்ரைல் (Aminoacetonitrile) என்பது அமினோ மற்றும் நைட்ரைல் தொகுதிகள் இரண்டும் இணைந்த C2H4N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் எளிய கரிமச் சேர்மமாகும். கிளைசீன் என்ற எளிய அமினோ அமிலத்தை ஒத்த பண்புகளுடன் இச்சேர்மம் காணப்படுகிறது. வர்த்தக முறையில் குளோரைடு மற்றும் சல்பேட்டு உப்புகளாக அமினோ அசிட்டோ நைட்ரைல் கிடைக்கிறது. தயாரிப்புகிளைகோலோநைட்ரைலை அமோனியாவுடன் வினை புரியச்செய்து தொழிற்சாலைகளில் பெருமளவில் அமினோ அசிட்டோ நைட்ரைல் தயாரிக்கப்படுகிறது
பயன்கள்அமினோ அசிட்டோ நைட்ரைலை நீராற்பகுப்பு செய்து கிளைசீன் தயாரிக்க முடியும்:[2] . இச்சேர்மத்தில் இருந்து கிளைக்கும் வழிப்பொருட்கள் பயனுள்ள புழுவெதிர்ப்பிகளாக உள்ளன. குறிப்பாக நூற்புழுக்கள் ஏற்படுத்தும் அசிட்டைல்கோலின் ( ஆங்கிலச் சுருக்கம், ACh)[3] என்ற நியூரான் கடத்தி பாதிப்பு நோயால் விளையும் விறைப்பு பக்கவாதத்திற்கு எதிராகச் செயல்பட்டு நூற்புழுக்களை அவையிருக்கும் இடத்தில் இருந்து விரைவாக வெளியேற்றுகிறது. விண்மீன்களிடை ஊடகத்தில்தனுசு விண்மீனுக்கு அருகே ஒரு மாபெரும் வாயு மேக மரபுவழித் தாயகத்தில் அமினோ அசிட்டோ நைட்ரைல் இருப்பதாக 2008 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டுள்ளது[4]. அண்டத்தில் கிளைசீன் பெருமளவில் இருக்கிறதா என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உதவியாக, மேக்சு பிளாங்க் ரேடியோ வானியல் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க இக்கண்டுபிடிப்பு அமைந்தது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்Property data at the National Institute of Standards and Technology NIST |
Portal di Ensiklopedia Dunia