பதினொன்றாம் லியோ (திருத்தந்தை)
திருத்தந்தை பதினொன்றாம் லியோ (2 ஜூன் 1535 – 27 ஏப்ரல் 1605; இயற்பெயர்: அலெஸ்ஸாந்ரோ ஒதாவியானோ தெ மெடிசி) என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 1605ஆம் ஆண்டு 1 ஏப்ரல் முதல் 27 ஏப்ரல் வரை திருத்தந்தையாக இருந்தவர் ஆவார்.[1] இவர் பிலாரன்சு நகரில்[2] பிராசெஸ்கோ சல்வியாதி மற்றும் ஒதாவியானோ தெ மெடிசி ஆகியோருக்கு பிறந்தவர். திருத்தந்தை பத்தாம் லியோவின் உடன் பிறந்தவரின் மகன் இவர்.[3] 22 ஜூலை 1567இல் இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். 1569 முதல் 1584 வரை திருத்தந்தை ஐந்தாம் பயஸால் பிலாரன்சுக்கான திருப்பீடத்தூதுவராக நியமிக்கப்பட்டார்.[4] பதின்மூன்றாம் கிரகோரி இவரை 1573இல் பிஸ்தோயாவின் ஆயராகவும், 1573இல் பிலாரன்சின் பேராயராகவும்,[5] 1583இல் கர்தினாலாகவும் உயர்த்தினார்.[2] 1596 இல் எட்டாம் கிளமெண்ட் இவரை பிரான்சு நாட்டுக்கு தூதுவராக அனுப்பினார்.[6] இவர் புனித பிலிப்பு நேரியாரின் நண்பரும் சீடரும் ஆவார். திருத்தந்தையாக![]() திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் இறந்த 11 நாட்களுக்கு பிறகு 1 ஏப்ரல் 1605இல் இவர் திருத்தந்தையாக தேர்வானார். தனது மாமா திருத்தந்தை பத்தாம் லியோவுக்கு மதிப்பளிக்கும் விதமாக அவரின் பெயரையே ஏற்றார்.[2] தேர்வாகும்போது இவருக்கு அகவை 70. இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயத்தில் நடந்த பதவியேற்பு நிகவினால் ஏற்பட்ட களைப்பு மற்றும் சளியின் காரனமாக தேர்வாகி 27 நாட்களிலேயே இவர் இறந்தார்.[7] மிகக்குறுகிய காலம் ஆண்டதினால் இவரை மின்னல் திருத்தந்தை ("Lightning Pope") என அழைப்பர். மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia