பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை)
திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட் (இலத்தீன்: Clemens X; 13 ஜூலை 1590 – 22 ஜூலை 1676), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 29 ஏப்ரல் 1670 முதல் 1676இல் தன் இறப்புவரை இருந்தவர் ஆவார். ஒன்பதாம் கிளமென்ட் இறந்து ஐந்து மாதங்களுக்குப்பிறகு, அவருடைய உற்ற நண்பராயிருந்த கர்தினால் எமிலியோ ஆல்தெரியை 1670 மே 12ல் புதிய பாப்புவாகத் தேர்ந்தெடுத்தனர். பத்தாம் கிளமென்ட் என்று பெயர் சூடிக் கொண்டார். முந்தய பாப்புவின் நல்ல நான்பர், சிறந்த பண்புகளுடன் விளங்கினார். 80 வயது நிரம்பியிராயிருந்ததால் திரு ஆட்சிப்பணிகளைச் சிறபாகச் செய்ய இயலவில்லை. புதிய பாப்புவை தேர்தெடுக்க கர்தினால்கள் கூடியிருந்த அவையில் பிரச்சனை மூன்டது தேர்தலில் இழுபறி நீடித்தது. புதியவரை தேர்ந்தடுக்க ஐந்து மாதங்களாயிற்று. கர்தினால் எமிலியோ சமரசப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டார் இவருடைய பணிக்காலம் மிக விரைவாக முடிந்து விடும் என்று நினைத்தனர், ஆனால் பத்தாம் கிளமென்ட் ஆறாண்டுகள் பணியாற்றினார் அவருடைய முதுமையின் காரணத்தினால் புதிய மறுமலர்ச்சி திட்டங்கள் எதுவும் கொண்டுவர முடியவில்லை. இவர் இளைய குருவாக இருந்த போது அனாதை சிறுவன் ஒருவனை தமது பராமரிப்பில் ஏற்றுகொண்டார். அந்த சிறுவன் பெயர் பவுல். இவர் அப்போது அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தபடுத்தப் பட்டிருந்தார். அவரை கர்தினால் பதவிக்கு உயர்த்தி தம்முடன் வைத்துகொண்டார். அர்ப்பண் உணர்வுடன் பணியாற்றினார் கர்தினால் பவுல். பாப்புவின் பணிக்காலம் முழுவதும் தமது வளர்ப்பு தந்தையின் அருகிலேயே இருந்து சேவை செய்தார். 1676 ஜீலை 22 ல் பாப்பு இறைபதம் அடைந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia