பிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன்
பிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன் (Francis William Aston, எஃப்.ஆர்.எஸ்;[2] 1 செப்டம்பர் 1877 - 20 நவம்பர் 1945) என்பவர் ஒரு ஆங்கில வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். இவர் 1922 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார், பொருள்களில் அடங்கியுள்ள அணுக்களின் எடையை அவற்றின் நிறைகளுக்கேற்பக் கணக்கிடப் பயன்படும் 'நிறைநிரல் வரைவி'யை முதன்முதலாகக் கண்டு பிடித்தவர் இவரே. அத்துடன் 'ஐசோடோப்' என அழைக்கப்படும் ஓரகத் தனிமங்களையும் இவரே கண்டறிந்து விளக்கினார்.[3][4] இவை இரண்டையும் கண்டுபிடித்தமைக்காக 1922ஆம் ஆண்டில் நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இவர் அரச கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் திரித்துவக் கல்லூரியின் சக உறுப்பினராக இருந்தார்.[5] இவர் கண்டுபிடித்த நிறைநிரல் வரைவி வேதியியலில் மட்டுமல்லாது அணுக்கரு இயற்பியல், உயிரியல், நில இயல்போன்ற பல்வேறு துறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை கண்டறியப்பட்டுள்ள 287 இயற்கை ஓரகத் தனிமங்களில் 212-ஐக் கண்டு பிடித்து விளக்கியவர் ஆஸ்டன் ஆவார். குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia