ரோஜர் கோர்ன்பெர்க்
ரோஜர் டேவிட் கோர்ன்பெர்க் (பி. ஏப்ரல் 24, 1947) அவர்கள் அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாநிலத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் என்னும் ஊரில் பிறந்தார். இவர் 2006ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு பெற்று புகழ் படைத்த அறிஞர். ரோஜர் கோர்ன்பெர்க் அவர்கள் கலிபோர்னியாவில் உள்ள இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் (Stanford University) பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் செய்த ஆய்வுகளின் பயனாய் எவ்வாறு பல கண்ணறைகள் (செல், cell) கொண்ட யூகார்யோட் (Eukaryotic) வகை உயிரினங்களில், ஈரிழை டி என் ஏ (DNA) வானது ஓரிழை ஆர் என் ஏ (RNA)வாக, அடிப்படை மூலக்கூறு இயல்பின் அடிப்படையில் மாறுகின்றது என்று அறிய இயன்றது. இவ்வாய்வுகளுக்காக 2006ஆம் ஆண்டிற்கான வேதியல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது[1]. பேராசிரியர் ரோஜர் கோர்ன்பெர்க்கின் தந்தையார் ஆர்தர் கோர்ன்பெர்க் அவர்களும் 1959ஆம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது[2]. தந்தை ஆர்தர் கோர்ன்பெர்க் அவர்களும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். வாழ்க்கை வரலாறுரோஜர் கோர்ன்பெர்க் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் 1967ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். பின்னர் 1972 ஆம் ஆண்டில் இஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டம் பெற்றார். பிறகு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரத்தில், மருத்துவ ஆய்வுக் குழுவில் மேல்முனைவர் நிலை ஆய்வுகள் நடத்தினார். 1976 ஆம் ஆண்டில் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியல் துறையில் துணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். பின்னர் 1978 ஆம் ஆண்டில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள உயிரியல் கட்டமைப்புத் துறையில் பேராசிரியராக மீண்டும் வந்து சேர்ந்தார். 1984-1992 காலப்பகுதியில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் துறைத்தலைவராகப் பணியாற்றினார். நோபல் பரிசுபட்டங்களும் பரிசுகளும்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia