தியோடர் வில்லியம் ரிச்சர்ட்சு
தியோடர் வில்லியம் ரிச்சர்ட்சு (Theodore William Richards) (ஜனவரி 31, 1868 - ஏப்ரல் 2, 1928) வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் அமெரிக்க அறிவியலாளர் ஆவார். அதிக எண்ணிக்கையிலான வேதியியல் தனிமங்களின் அணு எடைகளைத் துல்லியமாகக் கண்டறிந்தமைக்காக இந்த விருதினைப் பெற்றார். [1] வாழ்க்கை வரலாறுவில்லியம் டிராஸ்ட் ரிச்சர்ட்ஸ் என்ற நிலம் மற்றும் கடல் தளங்களை வரையும் ஓவியர் மற்றும் அன்னா நீ மட்லாக் என்ற கவிஞர் ஆகியோருக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பென்சில்வேனியாவில் ஜெர்மன்டவுன் என்ற இடத்தில் பிறந்தார். ரிச்சர்ட்சு கல்லூரிக்கு முந்தைய தனது கல்வியில் பெரும்பகுதியைத் தனது தாயாரிடமிருந்தே கற்றுக்கொண்டிருந்தார். ஒரு கோடைக்காலத்தில் ரோட் தீவுகளின் நியூபோர்ட்டில் தங்கியிருந்த போது இவர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோசையா பார்சன்சு குக் என்பவருடன் தங்கியிருந்த போது அவர் ஒரு சிறிய தொலைநோக்கியின் மூலம் சனிக்கோளின் வளையங்களை தியோடர் ரிச்சர்ட்சுக்கு காண்பித்தார். இதிலிருந்து ரிச்சர்ட்சு குக்குடன் இணைந்து அவரது ஆய்வகத்தில் பணியாற்றத் தொடங்கினார். 1878 இல் தொடங்கி, ரிச்சர்ட்ஸ் குடும்பம் ஐரோப்பாவில் இரண்டு ஆண்டுகள் கழித்தது. பெரும்பாலும் இங்கிலாந்தில், தியோடர் ரிச்சர்ட்ஸின் அறிவியல் ஆர்வங்கள் வலுவாக வளர்ந்தன. குடும்பம் அமெரிக்காவிற்குத் திரும்பிய பிறகு, 1883 ஆம் ஆண்டில் 14 வயதில் பென்சில்வேனியாவின் ஹேவர்போர்ட் கல்லூரியில் நுழைந்தார். 1885 ஆம் ஆண்டில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் அவர் ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1886 ஆம் ஆண்டில் மற்றொரு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். ரிச்சர்ட்சு ஆர்வர்டில் பயிலுவதைத் தொடர்ந்தார், ஹைட்ரஜனுடன் ஒப்பிட்டு ஆக்ஸிஜனின் அணு எடையை நிர்ணயிப்பதை தனது ஆய்வுக் கட்டுரையாக எடுத்துக் கொண்டார். அவரது முனைவர் பட்ட ஆலோசகராக ஜோசியா பார்சன்ஸ் குக் இருந்தார்.[சான்று தேவை] ஜெர்மனியில் முனைவர் பட்ட ஆய்விற்குப் பிந்தைய ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார். கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் இவர் விக்டர் மேயரின் கீழ் பயின்றார். ரிச்சர்ட்சு ஆர்வார்டின் வேதியியல் துறையில் ஒரு உதவியாளராக, பாடங்கற்பிப்பவராக, உதவிப் பேராசிரியராக, இறுதியில் 1901 ஆம் ஆண்டில் பேராசிரியரானார். 1903 ஆம் ஆண்டில் இவர் ஆர்வர்டில் வேதியியல் துறையின் தலைவரானார். 1912 ஆம் ஆண்டில் இவர் வேதியியல் பேராசிரியராகவும் புதிய வோல்காட் கிப்ஸ் நினைவு ஆய்வகத்தின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார். 1896 ஆம் ஆண்டில், ரிச்சர்ட்ஸ் மிரியம் ஸ்டூவர்ட் தாயெர் என்பவரை மணந்தார். இந்த ஜோடிக்கு ஒரு மகள், கிரேஸ் தாயெர் (அவர் ஜேம்ஸ் பிரையன்ட் கோனன்ட்டை மணந்தார்), மற்றும் இரண்டு மகன்கள், க்ரீனோஃப் தாயெர் மற்றும் வில்லியம் தியோடர். இரண்டு மகன்களும் தற்கொலை செய்து கொண்டு இறந்தனர். [2] ரிச்சர்ட்சு கலை மற்றும் இசை இரண்டிலும் ஆர்வத்தைக் கொண்டிருந்தார். இவரது பொழுதுபோக்குகளில் ஓவியம், கோல்ஃப் மற்றும் படகோட்டம் ஆகியவை அடங்கும். அவர் கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸில், ஏப்ரல் 2, 1928 அன்று தனது 60 வயதில் இறந்தார். இவரது வாரிசுகளில் ஒருவரின் கூற்றுப்படி, ரிச்சர்ட்ஸ் "நாள்பட்ட சுவாசப் பிரச்சினைகள் மற்றும் நீடித்த மனச்சோர்வு" ஆகியவற்றால் அவதிப்பட்டார். [3] அறிவியல் ஆராய்ச்சி![]() ரிச்சர்ட்ஸின் அறிவியல் ஆராய்ச்சியில் பாதியளவிற்கு அணு எடைகளைப் பற்றியதாக இருந்தது. 1886 ஆம் ஆண்டில் இவரது பட்டப்படிப்பின் போது இவரது ஆய்வுகள் தொடங்கியது. 1889 ஆம் ஆண்டில் ஆர்வர்டுக்குத் திரும்பியதும், இதுவே அவரது முதல் ஆய்வாக இருந்தது. இவ்வகை ஆய்வுகள் அவரது மரணம் வரை தொடர்ந்தது. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, 1932 வாக்கில் ரிச்சர்ட்ஸ் மற்றும் அவரது மாணவர்களால் 55 தனிமங்களின் அணு எடைகள் ஆய்வு செய்யப்பட்டன. [5] ரிச்சர்ட்ஸ் தனது பணியில் பயன்படுத்திய கவனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக, எம்ஸ்லி பின்வருமாறு கூறுகிறார். தூலியத்தின் துல்லியமான அணு எடையைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு தூய தூலியத்தைப் பெறுவதற்காக இவர் இத்தனிமத்தை 15000 முறை படிகமாக்கியுள்ளார். [6] வேதியியல் பகுப்பாய்வின் மூலம், ஒரு தனிமம் வெவ்வேறு அணு எடையைக் கொண்டிருக்க முடியும் என்பதை முதலில் ரிச்சர்ட்சு தான் உலகிற்குக் கூறியவர் ஆவார். கதிரியக்கச் சிதைவால் உற்பத்தி செய்யப்படும் ஈயம், இயற்கையான ஈயம் ஆகியவற்றின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ய இவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். இவரது அளவீடுகள் இரண்டு மாதிரிகளும் வெவ்வேறு அணு எடைகளைக் கொண்டிருப்பதைக் காட்டின. இது ஐசோடோப்புகளின் கருத்துக்களை ஆதரிப்பவையாக இருந்தது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia