ஐஇஇஇ சூழலிய பாதுகாப்பு நுட்பியல்களுக்கான பதக்கம் (2012) உலக ஆற்றல் பரிசு (2013) திரேப்பர் பரிசு (2014) யப்பான் பரிசு (2018) வேதியியலுக்கான நோபல் பரிசு(2019)
அக்கிரா யோசினோ சப்பானில் சூயிட்டாவில் 1948, சனவரி 30 இல் பிறந்தார்.[2] இவர் கியோட்டோ பல்க்லைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் (1970) படிப்பும் பொறியியலில் முதுகலைப் படிப்பும் (1972) படித்த பின்னர் ஒசாக்கா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார் .[3][4]
பணிவரலாறு
1972: காவாசாக்கி ஆய்வுக்களம், அசாஃகி கசெயி நிறுவனம். / இலித்திய-மின்மவணு மின்கலம் வளர்த்தெடுத்தல்.
1992: மேலாளர், உருப்படி வளர்ச்சிக் குழு, மின்மவணு மின்ககலத் தொழில் முன்னேற்றாத் துறை, அசாஃகி கசெயி நிறுவனம்
1994: மேலாளர், நுட்பியல் வளர்ச்சி, அ&தொ மின்கல நிறுவன, (இலித்திய-மின்மவணு மின்கலம் படைப்பர், அசாஃகி கசெயி-தோசிபா இணைந்த முயற்சி)
2005–இன்றுவரை: பொது மேலாளர், யோசினோ ஆய்வுக்களம், அசாஃகி கசெயி நிறுவனம் / முன்னணி மின்கல ஆய்வு
இலித்தியம்-மின்மவணு மின்கலம் கண்டுபிடிப்பு
1981 இல் அக்கிரா யோசினோ பாலியசிட்டிலீனைப் பயன்படுத்தி மீள்மின்மமூட்டவல்ல மின்கலங்கள் பற்றிய ஆய்வைத் தொடங்கினார். பாலியசிட்டிலீன் மின்மம் கடத்தவல்ல பல்லுரு ஆகும். இதனை இடேக்கி சிராக்காவா கண்டுபிடித்தார். இதற்காக சிராக்காவா 2000 ஆண்டிற்கான வேதிபியல் நோபல் பரிசை வென்றார்.[5]
1983 இல் யோசினோ இலித்தியம் கோபாற்று ஆக்சைடு என்பதை காத்தோடாக (எதிர்மின்மக் கொள்வாயாகப்) பயன்படுத்தி, பாலியசிட்டிலீனை ஆனோடாக (நேர்மின்மக் கொள்வாயாகப்) பயன்படுத்தி மீள்மின்மமூட்டவல்ல மின்கலம் ஒன்றின் முதலுருவைப் படைத்தார். இலித்தியம் கோபாற்று ஆக்சைடை (LiCoO2) 1979 இல் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் காடுசல் என்பாரும் அவருடனான ஆய்வாளர்களும்[6][7][8] ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சான் கூடினஃபு, கோயிச்சி மிசுசிமா ஆகியோர் கண்டுபிடித்தனர். இந்த முதலுரு மின்கலத்தில் நேர்மின்மக் கொள்வாயில் (ஆனோடில்) இலித்தியம் ஏதும் இல்லை. ஆனால் எதிர்மின்மக் கொள்வாயான இலித்தியக் கோபாற்று ஆக்சைடில் (LiCoO2 இருந்து இலித்திடிய மின்மவணு ஆனோடுக்கு (நேர்மின்மக் கொள்வாய்க்கு) நகர்ந்து மின்கலத்துக்கு மின்மமூட்டுக்கின்றது. இதுவே தற்கால இலித்திய மின்மவணு மின்கலத்துக்கு முன்னோடி ஆகும்.[5]
பாலியசிட்டிலீனின் அடர்த்தி குறைவு. எனவே அதிக கொள்ளளவு தேவைப்பட்டது. மேலும் பிரியா நிலைப்புத்தன்மை குறைவாக இருந்தது. எனவே 1985 இல் கரிமமடங்கிய பொருளை ஆனோடாகக் கொண்டு முதலுரு ஆக்கினார் இதற்கான புத்தியற்று காப்புரிமமும் பெற்றார்.[9][10]
இதுவே தற்கால இலித்திய மின்மவணு மின்கலத்தின் பிறப்பு.[5]
இலித்திய மின்மவணு மின்கலங்களை வணிக நோக்கில் சோனி 1991 இலும் அசாஃகி கசேயியும் தோசிபாவும் இணைந்து 1992 இலும் படைத்தனர். அக்கிரா யோசினோ, இந்த மின்கலங்களைப் படைத்ததில் எதிர்கொண்ட சிக்கல்களையும் படைப்பின் வாலாற்றையும் 2014 ஆம் ஆண்டில் வெளியான நூலின் ஒரு படலத்தில் விரித்துள்ளார்.[11].
பரிசுகளும் விருதுகளும்
2001: தொழிற்றுறை-சிறப்பு எட்டல்களுக்கான இச்சிமுரா பரிசு
2004: சப்பானிய அரசின் செவ்வூதா நாடாவுடனான பதக்கம்.
↑N. A. Godshall, I. D. Raistrick, and R. A. Huggins, Journal of the Electrochemical Society, Abstract 162, Vol. 126, p. 322C; "Thermodynamic Investigations of Ternary Lithium-Transition Metal-Oxide Systems for Lithium Batteries" (August 1979).
↑N. A. Godshall, I. D. Raistrick, and R. A. Huggins, Journal of the Electrochemical Society, Extended Abstract 162, Vol. 79-2, pp. 420-422; Thermodynamic Investigations of Ternary Lithium-Transition Metal-Oxide Systems for Lithium Batteries" (October 1979).
↑Ned A. Godshall, "Electrochemical and Thermodynamic Investigation of Ternary Lithium -Transition Metal-Oxide Cathode Materials for Lithium Batteries: Li2MnO4 spinel, LiCoO2, and LiFeO2", Presentation at 156th Meeting of the Electrochemical Society, Los Angeles, CA, (17 October 1979).
↑US 4668595, Yoshino; Akira, "Secondary Battery", issued 9 May 1986, assigned to Ashahi Kasei, Priority Data 10 May 1985, by Espacenet Patent search
↑"JP 2642206". Archived from the original on 2020-03-22. Retrieved 2019-10-09., by USPTO PATENT FULL-TEXT AND IMAGE DATABASE