பிளஸ் விரைவுச்சாலைகள்
![]() பிளஸ் விரைவுச்சாலைகள் அல்லது பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் (ஆங்கிலம்: PLUS Expressways; அல்லது PLUS Expressways Berhad (PEB); மலாய்: PLUS Expressways Berhad அல்லது Projek Lebuhraya Utara Selatan Berhad (PLUS) என்பது மலேசியாவில் மிகப்பெரிய நெடுஞ்சாலைக் கட்டுமான-செயலாக்க முதலீட்டு நிறுவனமாகும்.[1] பொதுவாக, இந்த நிறுவனம் பிளஸ் (ஆங்கிலம்; மலாய்: PLUS) என்றே அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் அதிவேக நெடுஞ்சாலை இயக்கச் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் விரைவுச்சாலை சுங்கச் சாவடிகளைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனமாகவும் செயல்படுகிறது. அத்துடன் உலகில் 8-ஆவது பெரிய விரைவுச்சாலை நிறுவனமாகவும் அறியப்படுகிறது.[2] பொதுபிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் 27 சூன் 1986-இல் மலேசிய நெடுஞ்சாலைகள் நிறுவனம் எனும் பெயரில் தொடங்கப்பட்டது. 13 மே 1988 அன்று, அதன் பெயரை வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிறுவனம் (Projek Lebuhraya Utara Selatan Berhad) (PLUS) என மாற்றியது.[3] 29 சனவரி 2002 அன்று, பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் ஒரு பொது நிறுவனமாக மலேசிய பங்குச் சந்தையில் இணைக்கப்பட்டது. மாநிலச் சாலைகளின் குறியீடுகள்மலேசியாவில் உள்ள மாநிலங்களில், கீழ்க்கண்டவாறு சாலைகளின் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்பு முறையையே பிளஸ் நிறுவனமும் பயன் படுத்தி வருகிறது.
நிறுவன உறுப்பினர்களின் பட்டியல்உள்நாடு
பன்னாடு
மேலும் காண்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia