கேஎல்சிசி சொத்து நிறுவனம் (மலாய்; KLCC Property Holdings Berhad; ஆங்கிலம்: KLCC Property Holdings) (KLCCP) என்பது மலேசியாவில் ஒரு சொத்துமுதலீட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம், தனக்குச் சொந்தமான அலுவலகங்கள், சில்லறை விற்பனைகள் மற்றும் விடுதி மனைச் சொத்துக்களை நிர்வகிக்கிறது.[2]
இந்த நிறுவனம், பர்சா மலேசியா (Bursa Malaysia) எனும் மலேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தக் குழுமத்தின் 75% பங்குகள், நேரடி மற்றும் மறைமுக நலன்கள் மூலம் பெட்ரோனாஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாக உள்ளன.[6]
கேஎல்சிசி சொத்து நிறுவனம். சூன் 2015 இல், RM12 பில்லியன் நிகர சொத்து மதிப்பைக் கொண்டு மலேசியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்றாக உள்ளது.[7][8]
↑"B.14 Summary of NAV"(pdf), Unaudited interim financial statements for the six month period ended 30 June 2015, KLCC Property Holdings Berhad, 2015, retrieved 2015-08-08