பூதப்பாண்டி
அமைவிடம்கன்னியாகுமரியிலிருந்து 27 கி.மீ.. தொலைவில் உள்ள இப்பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம் 13 கி.மீ.. தொலைவில் உள்ள நாகர்கோவில் ஆகும். இதன் கிழக்கில் ஆரல்வாய்மொழி 10 கி.மீ.. ; மேற்கில் தக்கலை 20 கி.மீ..; வடக்கில் அழகியபாண்டியபுரம் 8 கி.மீ..; தெற்கில் நாகர்கோவில் 10 கி.மீ.. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு4.5 ச.கி.மீ... பரப்பும், 15 வார்டுகளும், 51 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4280 வீடுகளும், 15931 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5] [6] சிறப்புகள்பூதபாண்டி தாடகை மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. நாகர்கோவில் - பாலமோர் சாலையில், நாகர்கோவிலிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இது பூதபாண்டியன் என்ற பாண்டிய மன்னர் தோற்றுவித்த தொன்மையான ஊராகும். பழையாறு ஆற்றின் கரையில் மிக அருமையான இயற்கைச் சூழலில் இவ்வூர் அமைந்துள்ளது. தொல்பொருள் ஆய்வில் முக்கியம் வாய்ந்த ஊர். இங்குள்ள ஆலயத்தின் தெய்வத்தின் பெயர் அருள்மிகு பூதலிங்கம் ஆகும். ஆண்டுத் தேர்த் திருவிழா சிறப்பான நிகழ்வாகும். புகழ் பெற்றவர்கள்ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia