மண்டைக்காடு
அமைவிடம்இதன் மேற்கில் குளச்சல் 2.5 கி.மீ.; வடகிழக்கில் திங்கள் நகர் 3 கி.மீ.; கிழக்கில் மணவாளக்குறிச்சி 2.5 கி.மீ.; தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 6 கிமி தொலைவில் உள்ள இரணியலில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு2.2 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 38 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3444 வீடுகளும், 13317 மக்கள்தொகையும் கொண்டது.[2][3][4] மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒரு பெரிய புனித ஸ்தலமாகும். இது தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரையில் குளச்சலுக்கு அருகில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் முக்கியமான இந்துக் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கொண்டாடப்படும் கொடை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia