அருமனை

அருமனை
—  பேரூராட்சி  —
அருமனை
அமைவிடம்: அருமனை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°21′58″N 77°14′36″E / 8.3662°N 77.2434°E / 8.3662; 77.2434
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

16,283 (2011)

2,544/km2 (6,589/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

6.40 சதுர கிலோமீட்டர்கள் (2.47 sq mi)

97 மீட்டர்கள் (318 அடி)

இணையதளம் www.townpanchayat.in/arumanai

அருமனை (ஆங்கிலம்:Arumanai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

இப்பேரூராட்சியின் எல்கையாக, கிழக்கே திருவட்டாறு முதல்நிலை பேரூராட்சியும், மேற்கே முழுக்கோடு ஊராட்சியும், வடக்கே கடையால் முதல்நிலை பேரூராட்சியும், தெற்கே வெள்ளாங்கோடு ஊராட்சியும் அமையப்பெற்றுள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6.40 கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 21 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,236 வீடுகளும், 16,283 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]

நிலவியல்

அருமனை இப்பொழுது ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். குமரி மாவட்டத்தின் மிகப்பெரிய நதியாகிய கோதையாறு இப்பகுதியின் வடகிழக்கு மற்றும் கிழக்கு எல்லைக்கோடு வழியாக பாய்கிறது. இம்மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகிய திற்பரப்பு நீர்வீழ்ச்சி அருமனையில் இருந்து 5.6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

விவசாயம்

அருமனையும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளும் எப்போதும் வளங்கொழித்துக்காணப்படும். மேலும் இப்பகுதி அனைத்து மேற்குக்கடற்கரைச் சுரப்பியின் இனங்களும் வளரும் தன்மையைப்பெற்றுள்ளது. 1950 களில் இப்பகுதியைச்சுற்றியுள்ள மலைப்பிரதேசங்கள் மற்றும் சமநிரப்பு பாதைகளிலும் ரப்பர் விவசாயம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது ரப்பர் விவசாயமே விளவன்கோடு தாலுக்கவிலுள்ள பல பகுதிகளில் முக்கிய விவசாயமாக உள்ளது.

கல்வி

அருமனையிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இங்கே நடுத்தர , மேல்நிலை, உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் என அனைத்து வகைப்பள்ளிகள் அமைந்ததோடு ஆங்கிலம், தமிழ் மற்றும் மலையாளம் எனப்பல மொழிக்கல்வி முறையும் அமைந்துள்ளது. தமிழகத்தில் வெகு சில அரசுப்பள்ளிகளில் மட்டுமே ஆங்கிலம்,தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிக்கல்வியும் கற்பிக்கப்படுகின்றது. அதில் அருமனை அரசு உயர்நிலைப்ப்பள்ளியும் ஒன்று என்பது இப்பகுதியின் சிறப்பான்மையாகும். மேலும் இப்பகுதியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கலைக்கல்லூரி ஒன்றும் சிறப்பே செயல்பட்டுவருகிறது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. அருமனை பேரூராட்சியின் இணையதளம்
  4. Arumanai Population Census 2011
  5. Arumanai Town Panchayat

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya