உண்ணாமலைக் கடை
உண்ணாமலைக் கடை (ஆங்கிலம்:Unnamalaikadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்கன்னியாகுமரியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள உண்ணாமலைக்கடை பேரூராட்சிக்கு கிழக்கே பள்ளியாடி 3 கி.மீ. தொலைவிலும்; மேற்கே நல்லூர் 3 கி.மீ. தொலைவிலும்; வடக்கே மார்த்தாண்டம் 1 கி.மீ. தொலைவிலும்; தெற்கே கிள்ளியூர் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதன் அருகில் உள்ள தொடருந்து நிலையம், 3 கி.மீ. தொலைவில் குழித்துறையில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு15.7 கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 54 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5969 வீடுகளும், 23656 மக்கள்தொகையும் கொண்டது.[4][5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia