மருங்கூர்

மருங்கூர்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் அகத்தீஸ்வரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

11,242 (2011)

1,124/km2 (2,911/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/marungoor

மருங்கூர் (ஆங்கிலம்:Marungur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மருங்கூர் மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.

அமைவிடம்

சுசீந்திரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள மருங்கூருக்கு கிழக்கே 13 கி.மீ. தொலைவில் கன்னியாகுமரி, மேற்கே 8 கி.மீ. தொலைவில் நாகர்கோவில், வடக்கே 8 கி.மீ. தொலைவில் ஆரல்வாய்மொழி, வடக்கே குமாரபுரம் தோப்பூரும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

10 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 48 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3619 வீடுகளும், 11242 மக்கள்தொகையும் கொண்டது.[4]

பொது

மருங்கூர் மூன்று முக்கிய தெருக்களை உள்ளடக்கியது வடக்கு,தெற்கு,ஆர் சி தெரு.இரண்டு பேருந்து நிறுத்தங்களை கொண்டுள்ளது.மருங்கூரில் விவசாயம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது.விளை நிலங்கள் வீடு மனைகளாக மாறி வருகின்றன.மக்கள் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரைப் பேச்சிப்பாறை அணையில் இருந்து கால்வாய் மூலமும்,காட்டாற்றில் இருந்தும் பெறுகின்றனர்.அவற்றை இரண்டு பெரிய குளங்கள் மூலம் தேக்கி விவசாயத்திற்கு உபயோகிக்கின்றனர். இவ்வூரில் ஆபத்து காத்த அம்மன் கோவில்,இடமலை கண்ட சாஸ்தா கோவில்,பஜனை மடம் போன்ற இந்து கோவிலும்,ஆர் சி சர்ச்சும்,சி‌எஸ்‌ஐ சர்ச்சும் உள்ளன. மருங்கூர் பஞ்சாயத்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு முக்கிய வியாபார மையமாகவும் உள்ளது.

சங்ககாலத்தில் மருங்கூர்

சங்ககாலப் புலவர்கள் மூவர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார், மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார் ஆகியோர் அந்தப் புலவர்கள்.

காண்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. மருங்கூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. மருங்கூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya