சுசீந்திரம்
![]() சுசீந்திரம் (ஆங்கிலம்:Suchindram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். தாணுமாலையன் கோயில்இங்கு தாணுமாலயன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் புராணகதைகள் அடங்கிய மூலிகை சிற்பங்கள், சிலைகள் இங்குள்ளன. இங்குள்ள மூலவர் பிரம்மா , விஷ்ணு. சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அடங்கிய ஒரே மூர்த்தியாகும். இக்கோயிலில் மார்கழி மற்றும் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது அமைவிடம்சுசீந்திரம், நாகர்கோவில் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்நகரமானது பழையாற்றின் கரையில் அமைந்த்துள்ளது. பேரூராட்சியின் அமைப்புசகி.மீ. 7.55 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,644 வீடுகளும், 13193 மக்கள்தொகையும் கொண்டது.[4][5] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 8°09′N 77°29′E / 8.15°N 77.48°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 19 மீட்டர் (62 அடி) உயரத்தில் இருக்கின்றது. இதையும் பார்க்கஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia