மனோக்குவாரி
மனோக்குவாரி (இந்தோனேசியம்: Kota Manokwari; ஆங்கிலம்: Manokwari; என்பது இந்தோனேசியா, மேற்கு பாப்புவா மாநிலத்தின், தலைநகரம் ஆகும். இந்த நகரம் மேற்கு பாப்புவா மாநிலத்தில் மிகப்பெரிய நகரமாகவும்; அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இந்தோனேசியாவின் மாநிலத் தலைநகரங்களில் நகரத் தகுதி இல்லாத ஏழு தலைநகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது மனோக்குவாரி பிராந்தியத்தின் நிர்வாகத் தலைமையிடமாகவும் உள்ளது. இருப்பினும், இந்தோனேசிய நாடாளுமன்றத்தால், தற்போது கருத்தாய்வில் உள்ள திட்டங்களின் கீழ், மனோக்குவாரி நகரத்தை பிராந்தியத் தகுதியில் இருந்து பிரித்து; தனி ஒரு நகரமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. மனோக்குவாரி மக்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். பொதுமேற்கு பப்புவா மாநிலத்தில் உள்ள சீர்திருத்தத் திருச்சபை சமூகத்திற்கான வரலாற்றுப் பகுதிகளில் மனோக்குவாரி பகுதியும் ஒன்றாகும். ஏனெனில் பிப்ரவரி 5, 1855 அன்று, இரண்டு பரப்புரையாளர்கள் மான்சினாம் தீவில் (Mansinam Island) தரையிறங்கி, இந்தப் பகுதியில் உள்ள பழங்குடியினரிடையே சீர்திருத்தத் திருச்சபை கிறிஸ்தவத்தைப் பரப்பும் பணியைத் தொடங்கினர். அந்த வகையில் மனோக்குவாரி மாநகரப் பகுதியில் 74% மக்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றி வருகின்றனர். இயற்கை வளங்கள்![]() மனோக்குவாரி நிலப்பகுதி; வேளாண்மை, காய்கறித் தோட்டங்கள், மீன்பிடித்தல் மற்றும் சுரங்கத் தொழில் போன்ற இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. வேளாண்மைப் பொருட்களில் மரவள்ளி மற்றும் இதர வகைக் கிழங்குகளும் அடங்கும். மீன்வளப் பொருட்களில் இறால் பண்ணை, மீன் பிடித்தல் முதன்மை வகிக்கின்றன; மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் தங்கம் போன்ற சுரங்கத் தொழில்கள் அடங்கும். போக்குவரத்துசாலைகள்மனோக்குவாரி நகர மையம், அதன் துறைமுகத்தையும் வானூர்தி நிலையத்தையும் இணைக்க ஒரே ஒரு சாலையைக் கொண்டுள்ளது. கடல்பஞ்சார்மாசின் தெருவில் உள்ள மனோக்குவாரி துறைமுகம் (Manokwari Port) 24 மணி நேரமும் இயங்குகிறது. வானூர்திமனோக்குவாரி நகரத்திற்கு ரெண்டானி வானூர்தி நிலையம் (Rendani Airport) சேவை செய்கிறது. இந்த நிலையம், மனோக்குவாரி நகர மையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது. காலநிலைமனோக்குவாரியில், ஆண்டு முழுவதும் அதிக மழை பெய்யும் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) உள்ளது.
இரட்டை நகரங்கள்
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia