மலேசிய தலைமைச் செயலாளர் Chief Secretary to the Government Ketua Setiausaha Negara மலேசியாவின் சின்னம்
தற்போதுடான் ஸ்ரீ முகமட் சுக்கி அலி
(Mohd Zuki Ali) 1 சனவரி 2020 முதல்
மலேசியப் பிரதமர் துறை சுருக்கம் KSN உறுப்பினர் அமைச்சரவை அறிக்கைகள் பிரதமர் பரிந்துரையாளர் பிரதமர் நியமிப்பவர் மாமன்னர் பிரதமரின் ஆலோசனையின் பேரில்முதலாவதாக பதவியேற்றவர் அப்துல் அசீஸ் அப்துல் மஜீத் Abdul Aziz Abdul Majidஉருவாக்கம் 1 ஆகத்து 1957; 67 ஆண்டுகள் முன்னர் (1957-08-01 ) ஊதியம் MYR 23,577 மாத ஊதியம்இணையதளம் www .ksn .gov .my
மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் (மலாய் : Ketua Setiausaha Negara Malaysia (KSN ); ஆங்கிலம் : Chief Secretary to the Government of Malaysia ) என்பவர் மலேசிய பொதுச் சேவையில் மிக மூத்த அதிகாரி; மலேசிய அமைச்சரவையின் செயலாளர்; மற்றும் பிரதமர் துறையின் பொதுச் செயலாளர் ஆவார்.
மலேசியாவில் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் என்ற பதவி மலாயா மாநிலங்களின் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பு இருந்தே மலாயா நிர்வாகத் துறையின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
பொது
1911- ஆம் ஆண்டில் ’அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர்’ பதவி மலாயாவில் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் இந்தப் பதவி ரெசிடென்ட்-ஜெனரல் எனும் தலைமை ஆலோசகர் பதவி (Resident-General ) என அழைக்கப்பட்டது.
முதன்முதலாக எட்வர்ட் லூயிஸ் புரோக்மேன் (Edward Lewis Brockman ) என்பவர் தலைமைச் செயலாளர் பதவியை வகித்தார்.
1911-ஆம் ஆண்டில் இருந்து 1920-ஆம் ஆண்டு வரையில் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தலைமைச் செயலாளராக இருந்தார். கோலாலம்பூர் நகர திட்டமிடல் சேவையை மேற்பார்வையிட நகர திட்டமிடல் குழுவை நிறுவியவரும் இவரே ஆவார். [[கோலாலம்பூர்| கோலாலம்பூரில் உள்ள புரோக்மேன் சாலை (Brockman Road ), அவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. தற்போது அந்தச் சாலை டத்தோ ஓன் சாலை (Jalan Dato' Onn )என்று அழைக்கப் படுகிறது.
1936-ஆம் ஆண்டிற்குப் பிறகு, தலைமைச் செயலாளரின் நிர்வாக அதிகாரங்கள் மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையரிடம் வழங்கப்பட்டன.
பங்களிப்புகள்
மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், மலேசிய பொதுச் சேவையில் உயர்த் தலைவர்; மற்றும் மலேசிய அரசாங்கத்தின் மிக உயர்ந்த பதவியில் உள்ள அரசு ஊழியர் ஆவார்.
அவர் மலேசிய அரசாங்கத்தின் செயலாளராக அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்வதுடன் அவற்றின் முடிவுகள் செயல்படுத்துவதையும் கண்காணிக்கிறார்.[ 1]
மலேசிய அமைச்சரவை
மலேசிய அமைச்சரவையில் மிகப் பெரிய அமைச்சான மலேசியப் பிரதமர் துறைக்கும் தலைமை தாங்குகிறார். இவர் பிரதமருக்கு ஆதரவு வழங்குவதுடன், பொதுச் சேவையின் நிர்வாகம் , அரசு நெறிமுறை மற்றும் இசுலாமிய விவகாரங்கள் ஆகியவற்றையும் கவனித்துக் கொள்கிறார்.[ 1]
அத்துடன் மலேசிய அமைச்சரவையில் உள்ள அமைச்சுகளின் பொதுச் செயலாளர்கள் மற்றும் தலைமை இயக்குநர்கள் கூட்டங்களுக்கும் இவர் தலைமை தாங்குகிறார்.[ 2]
மலேசியாவின் தற்போதைய தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ முகமட் சுக்கி அலி ஆவார்.
தலைமைச் செயலாளர்களின் பட்டியல்
தலைமைச் செயலாளர்கள் பட்டியல் பின்வருமாறு:
#
தோற்றம்
தலைமைச் செயலாளர்
பதவி காலம்
பிரதமர்
பதவியேற்பு
பதவி முடிவு
பதவி காலம்
1
துன் அப்துல் அசீஸ் அப்துல் மஜீத் (Abdul Aziz Abdul Majid) (1908 – 1975)
1 ஆகத்து 1957
31 ஆகத்து 1964
7 ஆண்டுகள், 30 நாட்கள்
துங்கு அப்துல் ரகுமான் (31 ஆகத்து 1957 – 22 செப்டம்பர் 1970)அப்துல் ரசாக் உசேன் (22 செப்டம்பர் 1970 – 14 சனவரி 1976)உசேன் ஓன் (15 சனவரி 1976 – 16 சூலை 1981)
2
டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ அப்துல் ஜமில் அப்துல் ராயிஸ் (Abdul Jamil Abdul Rais) (1912 – 1994)
1 செப்டம்பர் 1964
6 நவம்பர் 1967
3 ஆண்டுகள், 66 நாட்கள்
3
டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ துங்கு முகமட் துங்கு பெசார் புர்கானுடின் (Tunku Mohamad Tunku Besar Burhanuddin) (1912 – 1994)
7 நவம்பர் 1967
31 திசம்பர் 1969
2 ஆண்டுகள், 54 நாட்கள்
4
டான் ஸ்ரீ அப்துல் காதர் சம்சுதீன் (Abdul Kadir Shamsuddin) (1920 – 1978)
1 சனவரி 1970
30 செப்டம்பர் 1976
6 ஆண்டுகள், 273 நாட்கள்
5
துன் அப்துல்லா முகமட் சாலே (Abdullah Mohd Salleh)(1926 – 2006)
1 அக்டோபர் 1976
31 திசம்பர் 1978
2 ஆண்டுகள், 91 நாட்கள்
உசேன் ஓன் (Hussein Onn) (15 சனவரி 1976 – 16 சூலை 1981)மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) (16 சூலை 1981 – 30 அக்டோபர் 2003)
6
துன் அப்துல்லா அயூப் (Abdullah Ayub) (1926 – 2018)
1 சனவரி 1979
30 நவம்பர் 1982
3 ஆண்டுகள், 333 நாட்கள்
7
டான் ஸ்ரீ டத்தோ அசீம் அமான் (Hashim Aman) (1929 – 2018)
1 திசம்பர் 1982
14 சூன் 1984
1 ஆண்டு, 196 நாட்கள்
8
டான் ஸ்ரீ டத்தோ பாதுக்கா சாலேவுதீன் முகமட் (Sallehuddin Mohamed) (பிறப்பு.1932)
15 சூன் 1984
31 சனவரி 1990
5 ஆண்டுகள், 230 நாட்கள்
மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) (16 சூலை 1981 – 30 அக்டோபர் 2003)அப்துல்லா அகமது படாவி (Abdullah Ahmad Badawi) (31 அக்டோபர் 2003 – 3 ஏப்ரல் 2009)
9
துன் அகமட் சார்ஜி அப்துல் அமீது (Ahmad Sarji Abdul Hamid) (1938 – 2021)
1 பெப்ரவரி 1990
16 செப்டம்பர் 1996
6 ஆண்டுகள், 228 நாட்கள்
10
டான் ஸ்ரீ Abdul Halim Ali (அப்துல் அலீம் அலி) (பிறப்பு.1943)
17 செப்டம்பர் 1996
31 சனவரி 2001
4 ஆண்டுகள், 136 நாட்கள்
11
டான் ஸ்ரீ சம்சுதீன் ஒசுமான் (Samsudin Osman) (பிறப்பு.1946)
1 பெப்ரவரி 2001
2 செப்டம்பர் 2006
5 ஆண்டுகள், 213 நாட்கள்
12
டான் ஸ்ரீ முகமட் சீடேக் ஒசுமான் (Mohd Sidek Hassan) (பிறப்பு.1952)
3 செப்டம்பர் 2006
23 சூன் 2012
5 ஆண்டுகள், 294 நாட்கள்
அப்துல்லா அகமது படாவி (Abdullah Ahmad Badawi) (31 அக்டோபர் 2003 – 3 ஏப்ரல் 2009)நஜீப் ரசாக் (Najib Razak) (3 ஏப்ரல் 2009 – 9 மே 2018)
13
டான் ஸ்ரீ அலி அம்சா (Ali Hamsa) (1955 – 2022)
24 சூன் 2012
29 ஆகத்து 2018
6 ஆண்டுகள், 66 நாட்கள்
நஜீப் ரசாக் (Najib Razak) (3 ஏப்ரல் 2009 – 9 மே 2018)மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) (10 மே 2018 – 24 பிப்ரவரி 2020)
14
டான் ஸ்ரீ இசுமாயில் பாக்கார் (Ismail Bakar) (பிறப்பு.1960)
29 ஆகத்து 2018
1 சனவரி 2020
1 ஆண்டு, 125 நாட்கள்
மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) (10 மே 2018 – 24 பிப்ரவரி 2020)
15
டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ }}முகமட் சுக்கி அலி (Mohd Zuki Ali) (பிறப்பு.1962)
1 சனவரி 2020
Incumbent
5 ஆண்டுகள், 150 நாட்கள்
மகாதீர் பின் முகமது (10 மே 2018 – 24 பிப்ரவரி 2020)முகிதீன் யாசின் (Muhyiddin Yassin) (1 மார்ச் 2020 – 16 ஆகத்து 2021)இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) (21 ஆகத்து 2021 – 23 நவம்பர் 2022)அன்வர் இப்ராகீம் (Anwar Ibrahim) (தொடக்கம் 24 நவம்பர் 2022)
சான்றுகள்
வெளி இணைப்புகள்