ராணிகேத்
ராணிகேத் (Ranikhet) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் அமைந்த மலைவாழிடம் மற்றும் இந்திய இராணுவப் பாசறை நகரம் ஆகும்.[1] இராணிகேத் நகரம் இமயமலையில் 1,869 மீட்டர்கள் (6,132 அடி) உயரத்தில் உள்ளது.[1] இந்நகரம் இராணுவப் பாசறை மக்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2] இப்பாசறை நகரத்தில் குமாவுன் மற்றும் நாகா ரெஜிமெண்ட்களின் மருத்துவமனைகள் உள்ளது. அமைவிடம்ராணிகேத் இராணுவப்பாசறை, அல்மோராவிலிருந்து 46 கி.மீ., ரிஷிகேசிலிருந்து 282 கி.மீ., மற்றும் டேராடூனிலிருந்து 315 கி.மீ. தொலைவில் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 7 வார்டுகளும் 4,760 வீடுகளும் கொண்ட இராணிகேத் பாசறை நகரத்தின் மக்கள்தொகை 18,886 ஆகும். அதில் ஆண்கள் 11,412 மற்றும் பெண்கள் 7,474 ஆக உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1797 (9.51%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 95.21% ஆகவுள்ளது. மக்கள் தொகை இந்துக்கள் 85.11%, இசுலாமியர் 9.22%, கிறித்தவர்கள் 5.09% மற்றும் பிறர் 0.59% ஆகவுள்ளனர்.[3] தட்ப வெப்பம்டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதகங்ளில் இராணிகேத் நகரத்தில் பனி மழை பொழியும். கோடைகாலத்தில் வெயில் அடித்தாலும் இதமாக இருக்கும். கல்வி நிறுவனங்கள்ராணிகேத் நகரத்தில் 10 தொடக்கப்பள்ளிகளும், 6 நடுநிலைப்பள்ளிகளும், 4 உயர்நிலைப்பள்ளிகளும், 6 மேனிலைப்ப்பள்ளிகளும் உள்ளது.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிப்பயணத்தில் Ranikhet என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |
Portal di Ensiklopedia Dunia