லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி
லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் நகர்ப் பகுதியில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி.[1] இப்பள்ளி பிரித்தானியர் ஆட்சியின் போது 1897-ஆம் ஆன்டில் தூவாங்கு முனாவீர் (Tuanku Munawir) சாலையில் (லெமன் ஸ்திரிட்) தோற்றுவிக்கப்பட்டது. மலேசியாவின் மிகப் பழமையான தமிழ்ப்பள்ளிகளில் இந்தப் பள்ளியும் ஒன்றாகும். இப்பள்ளி தொடங்கப்பட்ட போது 26 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்றனர். தற்சமயம் 58 ஆசிரியர்களையும் 971 மாணவர்களையும் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கல்வி விளையாட்டுத் துறைகளில் அதிக முன்னேற்றம் கண்டு வருகிறது.[2] வரலாறுபிரித்தானியர் ஆட்சியின் போது, இப்பள்ளி 1897 இல் தூவாங்கு முனாவீர் சாலையில் (முன்பு: லெமன் ஸ்திரிட் Lemon Street) ஒரு சாதாரண கட்டடத்தில் முதலில் தொடங்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே இடப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால் 1940 இல் லோரோங் ஜாவாவில் உள்ள மற்றொரு கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அரசாங்க நிதியுதவி பெற்று தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளியாக மாற்றம் கண்டது. 1949 ஆம் ஆண்டுக்குள் மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு கண்டது. இடவசதி இல்லாத நிலையில் புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. மாணவர்களின் உடல்நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் பழைய கட்டடம் ஏற்புடையது அல்ல என்று முடிவு செய்யப்பட்டது. அதனால் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி அருகில் இருந்த விவேகானந்தா தமிழ்ப்பள்ளியுடன் ஒன்றிணைக்கப்பட்டது. தலைமையாசிரியராக இராசையா பொறுப்பேற்றார். 96 மாணவர்கள் அப்பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தனர். மாறுதல்கள்1960 ஆம் ஆண்டு லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட ஆரம்பித்தது. தலைமையாசிரியர் சின்னத்தம்பியிடம் இருந்து வி. கந்தையா என்பவர் புதிய தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார். பின்னர் 1973 ஆம் ஆன்டில் கி. தோமஸ் என்பவர் தலைமையாசிரியரானார். இவருடைய காலத்தில் இப்பள்ளி பெரும் மாறுதல்களைக் கண்டது. மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதனால் இரு வகுப்பறைகளைக் கொண்ட புதிய கட்டடமும் கட்டப்பட்டது. தலைமையாசிரியர்கள்லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் 1957 இல் இருந்து பணியாற்றிய தலைமையாசிரியர்களின் விவரங்கள்:
பொதுமேற்கோள்கள்காணொளிகள் |
Portal di Ensiklopedia Dunia