2021 உத்தராகண்டம் பனிப்பாறை வெடிப்பு வெள்ளம்
![]() 2021 உத்தராகண்ட் பனிப்பாறை வெடிப்பு வெள்ளம், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் சிவாலிக் மலையின் பனிப்பாறைகள் 7 பிப்ரவரி 2021 அன்று உருகி விழுந்த காரணத்தால், தௌலிகங்கா ஆறு மற்றும் அலக்நந்தா ஆறுகளில் தீடீர் என வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.[1][2] [3][4]சமோலி மாவட்டத்தில் உள்ள ரெய்னி கிராமத்தில் அமைந்துள்ள இந்திய அரசின் தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையம் அருகே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மின் நிலையத் தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இதில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிகிறது. 125 பேர் காயமடைந்தனர். அப்பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 3 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.[5] காரணம்பனிச்சரிவு ஏற்பட்டு அதனால் பெருவெள்ளம் ஏற்பட்ட இடம், உத்தராகண்டின் தொலைநிலை பகுதி என்பதால் அதற்கான உடனடி காரணம் குறித்து இதுவரை சரிவர தெரியவில்லை. இமயமலை தொடரின் இந்த பகுதியில் மட்டும் ஏறக்குறைய 1,000 பனிப்பாறைகள் உள்ளதாக துறைசார் வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்பனிப்பாறைகளில், மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று, வெப்பநிலை உயர்வின் காரணமாக உடைந்து, அதனுள் இருந்த அதிகளவிலான தண்ணீர் ஒரே சமயத்தில் வெளியேறி இருக்க வேண்டுமென்றும் நம்பப்படுகிறது. இதைத்தொடர்ந்தே, பனிச்சரிவு ஏற்பட்டு பாறைகளும், மண்ணும் வீழ்த்திருக்க வேண்டுமென்றும் கருதப்படுகிறது. வேறுசில வல்லுநர்களோ, மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று பனிப்பாறை ஏரியின் மீது விழுந்ததன் காரணமாக அது வெடித்து பெருமளவில் நீர் வெளியேற்றம் நடந்ததே, வெள்ளத்துக்கு வித்திட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.[6][7] சேத விவரம்தௌலி கங்கை ஆற்றில் ஏற்பட்ட தீடீர் வெள்ளப் பெருக்கினால், சமோலி மாவட்டத்தின் தபோவன் பகுதியில் உள்ள ரெய்னி கிராமத்தில் பாயும் ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ரிஷிகங்கா அணை உடைந்ததுடன், அங்குள்ள தேசிய அனல் மின் நிறுவனத்திற்கு சொந்தமான தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலையமும் பலத்த சேதம் அடைந்ததது. மேலும் மின் உற்பத்தி நிலையத்தின் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 150 பேர் காணாமல் போயினர்.[8] [9]வெள்ளத்தால் 4 புனல் மின் நிலையங்கள் பலத்த சேதமடைந்துள்ளது.[10] மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்அவசர மீட்புப் பணிக்காக இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.[11]ஆற்றின் கரையோர கிராம மக்களின் பாதுகாப்பினை முன்னிட்டு அலக்நந்தா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இரு அணைகளின் மததகுகளை உடனடியாக திறந்து வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ரிஷிகேஷ் மற்றும் அரித்துவாரில் பாயும் கங்கை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. [12] தபோவன் விஷ்ணுகாட் நீர் மின் நிலைய சுரங்கத்தில் இதுவரை 37 பேர்களின் உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 168 பேரை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. சேறுகளை அகற்றி அவர்களை மீட்கும் பணியில் இந்திய இராணுவம், இந்திய - திபெத் எல்லைக் காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படைகளின் 450-க்கு மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 120 மீட்டர் நீளத்திற்கு இடிபாடுகளை அகற்றிவிட்டனர். நேற்று முன்தினம் நீர் மின் நிலைய சுரங்கத்தில் துளையிடும் பணியை தொடங்கினர். ஆனால், தௌலிகங்கா ஆற்றில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால், மீட்புப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், சிறிது நேரம் கழித்து மீட்புப்பணி தொடர்ந்தது.[13] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia