அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார்
அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார் (கிரேக்க மொழி: Ἀθανάσιος Ἀλεξανδρείας, Athanásios Alexandrías) (பி. சுமார். 296-298 – இ. 2 மே 373), அல்லது அலெக்சாந்திரியா நகரின் முதலாம் அத்தனாசியார் அல்லது புனித பெரிய அத்தனாசியார் என்பவர் 8 சூன் 328 முதல் 2 மே 373 வரை மொத்தம் 45 ஆண்டுகள் அலெக்சாந்திரியா நகரின் 20ஆம் ஆயராக இருந்தவர் ஆவார். இவரின் பணிக்காலத்தில் மொத்தம் 17 ஆண்டுகள் நான்கு வெவ்வேறு உரோமை அரசர்களால் ஐந்து முறை நாடு கடத்தப்பட்டார். இவர் ஒரு சிறந்த இறையியலாளரும், திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவரும், ஆரியனிய தப்பரைக்கெதிரான திரித்துவம் குறித்த வாதவல்லுநரும், நான்காம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க எகிப்திய தலைவரும் ஆவார். அத்தனாசியார் கிழக்கின் நான்கு மிகப்பெரும் திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவராக கத்தோலிக்க திருச்சபையினால் மதிக்கப்படுகின்றார்.[1] கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவர் மரபின் தந்தை ("Father of Orthodoxy") என புகழப்படுகின்றார். சீர்திருத்தத் திருச்சபையினர் பலரும் இவரை விவிலியத் திருமுறையின் தந்தை என புகழ்ந்துள்ளனர். மேற்கத்திய கிறித்தவத்தில் இவரின் விழா நாள் 2 மே ஆகும், கிழக்கத்திய கிறித்தவத்தில் 18 ஜனவரி ஆகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia