ஆத்திரேலியாவின் ஆண்கள் துடுப்பாட்ட அணி 2023 செப்டம்பர், நவம்பர். திசம்பர் மாதங்களில் இந்தியாவில் மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும், ஐந்து பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[1] ஒருநாள் போட்டித்தொடர்கள் இரு அணிகளினதும் 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளாக அமைந்தன.[2]
அணிகள்
ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் மூன்றாவது பன்னாட்டு ஒருநாள் போட்டிக்கு இந்தியாவின் தலைவராகவும், துறைத்தலைவராகவும் முறையே பணியாற்றுவார்கள்[7]
பஒநா தொடர்
1-ஆவது பஒநா
- நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மத்தியூ சோர்ட் (ஆசி) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- முகம்மது சமி இந்தியாவில் ஆத்திரேலியாவுக்கு எதிராக ஐந்து இலக்குகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளரும், வேகப்பந்து வீச்சாளரும் ஆவார்.[8]
- இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஒரு நாள் தரவரிசையில் முதலாவதாக வந்துள்ளது, 2012 இல் தென்னாப்பிரிக்காவுக்குப் பிறகு இந்தியா இரண்டாவது அணியாக ஒரே நேரத்தில் அனைத்து வடிவங்களிலும் முதலாவது தரவரிசை அணியாக உள்ளது.
2-ஆவது பஒநா
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக ஆத்திரேலியாவின் வெற்றி இலக்கு 33 நிறைவுகளுக்கு 317 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
- இசுப்பென்சர் யோன்சன் (ஆசி) தன்மது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- ஆத்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த அதியுயர் பன்னாட்டு ஒருநாள் ஓட்டங்கள் இதுவாகும்.
3-ஆவது பஒநா
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஸ்டீவ் சிமித் (ஆசி) தனது 5,000-ஆவது பன்னாட்டு ஒருநாள் ஓட்டத்தை எடுத்தார்.[9]
இ20ப தொடர்
1-ஆவது இ20ப
- நாணயச்சுற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சூர்யகுமார் யாதவ் முதல் தடவையாக இந்தியாவின் இ20ப அணியின் தலைவராக விளையாடினார்.[10]
- யோசு இங்கிலிசு (ஆசி) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்றார்.[11]
- இது இ20ப போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச வெற்றிகரமான ஓட்டத் துரத்தல் ஆகும்.[12]
2-ஆவது இ20ப
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- 235/4 என்ற இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை இ20ப போட்டிகளில் ஐந்தாவது அதிகபட்சமாகும்.[13][14]
3-ஆவது இ20ப
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ருதுராஜ் கெயிக்வாட் (இந்) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்றார், அத்துடன் ஆத்திரேலியாவுக்கு எதிராக இ20ப சதத்தை அடித்த முதலாவது இந்தியர் இவராவார்.[15]
4-ஆவது இ20ப
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- கிறிசு கிறீன் (ஆசி) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
- இந்த விளையாட்டரங்கில் விளையாடப்படும் முதலாவது இ20ப போட்டி இதுவாகும்.[16]
5-ஆவது இ20ப
|
எ
|
|
|
|
பென் மெக்டெர்மொட் 54 (36) முகேசு குமார் 3/32 (4 நிறைவுகள்)
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்