ஆத்திரேலியா முதலாவது இ20ப போட்டியை 10 இலக்குகளால் வென்றது. ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் இருவரும் இணைந்து 134 ஒட்டங்களை ஆட்டமிழக்காம எடுத்தனர்.[6] இரண்டாவது இ20ப போட்டியையும் ஆத்திரேலியா 3 இலக்குகளால் வென்றது.[7] மூன்றாவது இ20 போட்டியில் இலங்கை அணி 4 இலக்குகளால் வென்றது. இதன் மூலம் ஆத்திரேலியா 2-1 என்ற கணக்கில் இ20ப தொடரை வென்றது.[8]
ஒருநாள் தொடரில், முதலாவது ஆட்டத்தில் ஆத்திரேலியா இரண்டு இலக்குகளால் வென்றது.[9]கிளென் மாக்சுவெல் 51 பந்து வீசுகளுக்கு ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களை எடுத்தார்.[10] இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை 26 ஓட்டங்களால் வென்று சமப்படுத்தியது.[11] மூன்றாவது ஆட்டத்தில், இலங்கை 6 இலக்குகளால் வென்றது. பத்தும் நிசங்க தனது முதலாவது ஒருநாள் சதத்தை எடுத்தார்.[12] இதுவே ஆத்திரேலியாவுக்கு எதிரான இலங்கையின் வெற்றிகரமான ஓட்ட வெற்றியாகும்.[13] நான்காவது ஆட்டத்தை இலங்கை 4 ஓட்டங்களால் வென்று, 1992 இற்குப் பின்னர் இலங்கை மண்ணில் ஆத்திரேலியாவை ஒருநாள் தொடரைக் கைப்பற்றி சாதனை புரிந்தது.[14] ஐந்தாவது ஆட்டத்தை ஆத்திரேலியா 4 இலக்குகளால் வென்றது. ஒருநாள் தொடரை இலங்கை 3–2 என்ற கணக்கில் கைப்பற்றியது.[15]
இலங்கைக்கான சுற்றுப்பயணத்திற்காக, கிரிக்கெட் ஆத்திரேலியாவும் ஆத்திரேலியா A அணிக்கான அணியை அறிவித்து,[21] இரண்டு ஒரு நாள் போட்டிகளையும் இரண்டு முதல்தரப் போட்டிகளையும் விளையாட செய்தது.[22][23]