இலங்கையின் மாகாணங்கள்
இலங்கையின் மாகாணங்கள் என்பது ஒரு உள்ளூராட்சி அமைப்பாகும். இதன் படி இலங்கை 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 9 மாகாணங்களும் தனித்தனி மாகாண சபைகளின் கீழ் நிர்வகிக்கப்படுகிறன. தோற்றம்பிரித்தானிய ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை அடைந்த பின், நடைமுறையிலிருந்த அரசியல் அதிகாரங்களை மையப்படுத்திய ஆட்சிமுறை இலங்கை மக்களின் அரசியல் தேவைகளை நிறைவு செய்யமுடியாமல் போகவே. 1955 ஆண்டு தொடக்கமே அரசியல் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இம் முறைகள் பலனற்று போனபோது புதிய பரவலாக்க முறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அவற்றில் சில
சட்டம்1987 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் 13ஆவது அரசியல் அமைப்புச் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது மாகாணசபைகளை அமைத்தல், மாகாணசபைகளுக்கு ஆளுனர்களை நியமித்தல், மாகாணசபை அமைச்சர் நியமனம், மாகாணசபையின் அதிகாரங்கள், மாகாணசபைகள் சட்டத்தை மீறும் போது எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள், மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைப்பு, மாகாண நிதி ஆனைக்குழு போன்றவற்றுக்கான அடிப்படைச் சட்டமாகும். இதன் பிறகு பாராளுமன்றத்தில் 1987 ஆம் ஆண்டு 42ஆம் இலக்க மாகாணசபைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மாகாணசபை உறுப்பினர் எண்ணிக்கை, மாகாணசபைக் கூட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள், நிதிச் செயற்பாடுகள், பொதுச் சேவைகள் அமைத்தல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. நிர்வாகம்மாகாணசபையானது பின்வரும் நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்.
தகவல்கள்
மாகாணத் தரவுகள்2012 கணக்கெடுப்பின் படி, இலங்கையின் மாகாண ரீதியாக மக்கள்தொகை தரவுகள்:
குறிப்புகள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia