தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்
![]() தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர். தற்போதுள்ள தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.[1][2] இம்மாநிலத்தின் தற்பொழுதைய ஆளுநராக மேதகு ஆர். என். ரவி[3] பதவி வகித்துக் கொண்டு வருகின்றார். ஆளுநர்கள்![]() மதராஸ் இராஜதானி அல்லது மதராஸ் மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாக, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் (புனித ஜார்ஜ் கோட்டை) தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இப்பொழுதுள்ள தமிழ்நாடு, மலபார் பிராந்தியமான வட கேரளம் , ஆந்திராவின் கடற்கரை மற்றும் ராயலசீமா பிராந்தியங்கள், பெல்லாரி, தக்சன கன்னடா, மற்றும் கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது. மதராஸ் இராஜதானி 1653 இல் ஆங்கிலேயர் குடியேறிய கோரமண்டல் கடற்கரைப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு பெரிய மாகாணமாக நிர்மாணிக்கப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலையடைந்ததற்குப்பின், மதராஸ் மாநிலம் என்ற பெயருடனும், தற்பொழுது தமிழ்நாடு மாநிலம் என்ற பெயருடன் அமைந்ததின் முன்னோடியாக மதராஸ் இராஜதானி விளங்குகின்றது. இதனோடு இணைந்திருந்த பிராந்தியங்கள் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மற்றும் கேரளம் ஆகியப் பிராந்தியங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.[4]
தமிழ்நாடுமதராஸ் மாநிலம் ஜனவரி 14, 1969,[2] அன்று தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கொண்டது. தமிழக ஆளுநர்கள் மாநில அளவில் மைய அரசின் வரையறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரவரம்பையேப் பெற்றுள்ளனர். ஆனால் ஆளுநர் பெயரளவில் மட்டுமே தமிழக மாநிலத் தலைமையை ஏற்றுள்ளார். மாநிலப் பொறுப்புகள் மற்றும் ஆட்சி அதிகாரங்களை தமிழக மாநில முதல்வர்கள் மற்றும் அவரது அமைச்சரவையே பெற்றுள்ளன. தமிழக மாநில அரசின் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் செயல் வடிவங்கள் ஆளுநரின் பெயரிலேயே நிறைவேற்றப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுப் பதிவுகள்![]()
மேற்கோள்கள்
குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia