தமிழ்நாட்டின் ஆளுநர்
தமிழ்நாட்டின் ஆளுநர் (Governors of TamilNadu) தென் இந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர், தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர். தற்பொழுதுள்ளத் தமிழ்நாடு, முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.[1][2] தமிழ்நாட்டின் தற்பொழுதய ஆளுநாராக மேதகு ஆர். என். ரவி என்பவர் செப்டம்பர் 18, 2021 முதல் பதவி வகித்து வருகிறார். இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia