இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.
வரலாறு
தமிழ்நாட்டின் மாவட்டங்களின் பிரிவினை விவரிக்கும் அசைபடம் 1956 முதல் 2009 வரைஇந்திய வரைபடத்தில் உள்ள தமிழ்நாடு மாநிலம்
2011 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கட் தொகை 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 46,81,087 பேர் வசித்து வருகின்றனர். இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 26,903 ஆக இருக்கிறது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள மாவட்டம், நீலகிரி மாவட்டம் ஆகும் (ஒரு ச.கி.மீ.க்கு 288 பேர்). கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் முதன்மையாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் 92.14% பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். கல்வியறிவில் 64.71% பெற்று, தருமபுரி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது.[7] கீழே உள்ள அட்டவணையில், அனைத்து 38 மாவட்டங்களுக்கான புவியியல் மற்றும் மக்கட்தொகை அளவுருக்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.[8]
ஈரோடு மாவட்டத்தைப் பிரித்து கோபிச்செட்டிப்பாளையம் நகரைத் தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.[16]
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களை உள்ளடக்கி புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை உள்ளது.[17] தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து பட்டுக்கோட்டை தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் கோரிக்கை வைத்துள்ளார்.[18]
வடக்கு சென்னை மக்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னையை இரண்டாகப் பிரித்து, வடசென்னையை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வருகிறது.[19]
தூத்துக்குடி மாவட்டத்தை பிரித்து கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[23]
கடலூர் மாவட்டத்தை பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, முஷ்ணம் ஆகிய வருவாய் வட்டங்களுடன், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள சில வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக நெய்வேலி வட்டத்தையும் உருவாக்கி விருத்தாசலம் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[24]
சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.[25]
↑"Government of Tamil Nadu – Taluks". Information Technology Department, Government of Tamil Nadu. National Informatics Centre. Archived from the original on 3 October 2019. Retrieved 19 April 2020.