புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருத்தந்தையர்களின் பெயர்ப் பட்டியல். காப்பிடம்: புனித பேதுரு பேராலயம், வத்திக்கான் நகரம்
திருத்தந்தையர்களின் பட்டியல் (List of Popes) என்பது கத்தோலிக்க கிறித்தவத் திருச்சபை "திருத்தந்தையர்" என்றும் "போப்பாண்டவர்" என்றும் குறிப்பிடுகின்ற உரோமை ஆயர்களின் பெயர் வரிசையை வரலாற்று முறையில் அமைக்கின்ற அடைவு ஆகும். வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடம் ஒவ்வொரு ஆண்டும் "திருத்தந்தை மேலிடப் புள்ளிவிவரத் தொகுப்பு" (Annuario Pontificio) என்னும் பெயரில் வெளியிடுகின்ற நூல் அதிகாரப்பூர்வமானதாகக் கருதப்படுகிறது. இப்புள்ளிவிவரத் தொகுப்பில் இன்று கத்தோலிக்க திருச்சபையின் தலைவராய் இருக்கும் 16ஆம் ஆசீர்வாதப்பர் (பெனடிக்ட்) வரலாற்றில் 265ஆம் திருத்தந்தை என்று குறிக்கப்படுகிறார். அப்பட்டியலே கீழே தரப்படுகிறது.[1]
திருத்தந்தை என்னும் பெயர்
கத்தோலிக்க திருச்சபை வழக்கப்படி, உரோமை ஆயர் "திருத்தந்தை" (போப்பாண்டவர்) என்று அழைக்கப்படுகிறார். இப்பெயர் இலத்தீன் மொழியில் "Papa" என்பதாகும். அதன் பொருள் "தந்தை", "அப்பா" ஆகும். இதுவே ஆங்கிலத்தில் "Pope" என்றாகியது. அதனடிப்படையில் "போப்பாண்டவர்" என்னும் சொல் தமிழில் வரலாயிற்று.
வரலாற்றில், திருத்தந்தையரைக் குறிக்க வேறு சில பெயர்களும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. "இறையடியார்க்கு அடியார்" (Servant of the Servants of God) என்னும் பட்டம் திருத்தந்தை மக்களுக்குப் பணிபுரியவே பதவி ஏற்கிறார் என்பதைக் காட்டுகிறது. வேறு சில பெயர்கள் பண்டைய உரோமைப் பேரரசின் மரபுவழி வந்தவை ஆகும். உரோமைப் பேரரசனுக்கு "Pontifex" (Pontiff) என்றொரு பட்டம் இருந்தது. அதற்கு "பாலமாக அமைபவர்" ("பெருந்தலைவர்") என்பது பொருள். அதை அடியொற்றி, திருத்தந்தை "Summus Pontifex" (Supreme Pontiff) என்றும் பெயர் கொண்டுள்ளார். இன்னொரு பெயர் Vicarius Christi (Vicar of Christ) என்பதாகும். இதன் பொருள் "கிறிஸ்துவின் பதிலாள்". வழக்கமாக அவர் Sanctus Pater (Holy Father), அதாவது "தூய (திரு) தந்தை" என்னும் பெயரால் அறியப்படுகிறார்.
வரலாற்றுத் தகவல்கள் கிடைத்ததையொட்டி, திருத்தந்தையரின் பெயர்ப்பட்டியலில் பலமுறை திருத்தங்கள் செய்யப்பட்டன. 2001ஆம் ஆண்டு நிகழ்ந்த திருத்தம் துல்லியமான வரலாற்றுப் பார்வையோடு செய்யப்பட்டது.
புரட்டஸ்டாண்டு என்று அழைக்கப்படும் சீர்திருத்த சபைகளும் கீழை மரபுச் சபைகளும் திருத்தந்தையை உரோமை ஆயர் என்று ஏற்றபோதிலும் அவருக்கு அனைத்துலத் திருச்சபைமீது நிர்வாகப் பொறுப்பு உண்டு என ஏற்பதில்லை. கத்தோலிக்க கிறித்தவ சபைக் கருத்துப்படி, திருத்தந்தை இயேசுவின் முதன்மைச் சீடராகிய பேதுருவின் வாரிசு என்னும் முறையில் அனைத்துலத் திருச்சபைக்கும் தலைவராகவும் ஒற்றுமையின் அடையாளமாகவும் உள்ளார்.
இயேசு ஏற்படுத்திய பன்னிரு திருத்தூதர்கள் குழுவுக்குத் தலைவர் என்றும், விண்ணரசின் திறவுகோல்களை இயேசுவிடமிருந்து பெற்றார் என்றும் (மத்தேயு 16:18-19), உரோமையின் முதல் ஆயர் என்றும் கத்தோலிக்க கிறித்தவ சபையினர் ஏற்கின்றனர். மறைச்சாட்சிகளாக இறந்த பேதுரு, பவுல் பெருவிழா: சூன் 29 (கீழைத் திருச்சபையும் கொண்டாடுகிறது); பேதுருவின் தலைமை விழா: பெப்ருவரி 22.
தலை துண்டிக்கப்பட்டு மறைச்சாட்சியாக இறந்தார்; இரத்தசாட்சி; விழா நாள் : 10 ஆகஸ்டு; கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார். விழா நாள்: 10 ஆகஸ்டு
உரோமைப் பேரரசு கிறித்தவர்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலாம் கான்ஸ்டன்டைன் பேரரசன் கி.பி. 313இல் வெளியிட்ட "மிலான் சாசனத்திற்குப்" பிறகு பணியேற்ற முதல் திருத்தந்தை மில்த்தியாதேஸ் ஆவார்
கிரேக்கத்திலிருந்தும் எபிரேயத்திலிருந்தும் விவிலியத்தை இலத்தீனில் மொழிபெயர்க்கும் பொறுப்பைப் புனித ஜெரோம் (எரோணிமுசு) என்பவரிடம் ஒப்படைத்தார்; 382இல் உரோமைச் சங்கத்தைக் கூட்டினார்; பிற சமய மரபில் இருந்த "பெருந்தலைவர்" (Pontifex Maximus) என்னும் பட்டத்தைத் திருத்தந்தையருக்கு அளிக்கும்படி கிரேசியன் பேரரசனிடம் வேண்டிப் பெற்றார்.
"இறையடியாருக்கு அடியார்" (Servus servorum Dei = Servant of the servants of God) என்னும் சிறப்புப் பெயரையும் "பாலமாக அமைபவர்/பெருந்தலைவர்" (Pontifex Maximus = Supreme Pontiff) என்னும் பெயரையும் முதன்முறையாகப் பயன்படுத்தினார். விழா நாள்: 3 செப்டம்பர். கீழைத் திருச்சபையிலும் புனிதராகப் போற்றப்பெறுகிறார். விழா நாள்: 12 மார்ச்.
புனித ஆசீர்வாதப்பர் சபையைச் சார்ந்த இந்தத் திருத்தந்தை முதன்முறையாகத் தம் முன்னோடியின் பெயரைத் தமதாக எடுத்துக்கொண்டார். இவர் உரோமையில் ஜூப்பிட்டர் என்னும் பிற சமயக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலைக் கிறித்தவ கோவிலாக மாற்றினார். "எல்லாக் கடவுளர்க்கும்" என்னும் பொருள்படும் "Pantheon" கோவில் இன்று எல்லாப் புனிதர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கிறித்தவ கோவிலாக உள்ளது.
இவர் இரண்டாம் ஸ்தேவான் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நாட்களுக்கு பின், ஆயராகத் திருப்பொழிவு பெற்று திருத்தந்தை பதவி ஏற்பதற்குமுன் இறந்துவிட்டார். கத்தோலிக்க திருச்சபையின் பட்டியலில் 16ஆம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டிருந்தாலும், 1961இல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். இப்போது கத்தோலிக்க திருச்சபை இவரைத் திருத்தந்தையாக எண்ணிக்கையில் சேர்ப்பதில்லை.
92/8
26 மார்ச் 752 – 26 ஏப்ரல் 757 (5 வருடங்கள்)
இரண்டாம் ஸ்தேவான் (முடியப்பர்), (மூன்றாம் ஸ்தேவான்) Papa STEPHANUS Secundus (Tertius)
இவர் இறந்தபின்பு இவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு இவர்மீது பெரும்பாலும் அரசியல் பின்னணியில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த விசித்திர விசாரணை நடந்த ஒன்பதாம் நூற்றாண்டில் திருத்தந்தையர் அரசியல் சூழ்ச்சிகளுக்கு ஆளாயினர்.
மூன்றாம் செர்ஜியுஸ் ஆட்சியிலிருந்து ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் திருத்தந்தைப் பதவி அரசியல் செல்வாக்கு கொண்ட தியோஃபிலாக்டஸ் என்னும் குடும்பத்தால் கட்டுப்படுத்தப்பட்டது; திருத்தந்தையரைத் தேர்ந்தெடுப்பதில் தலையீடு. திருத்தந்தையர் ஆட்சியின் "இருண்ட காலம்". அப்போது பல சீரழிவுகள் ஏற்பட்டன.
பன்னிரண்டாம் யோவானுக்குப் பிறகு ஓட்டோ மன்னர் எட்டாம் லியோவைத் திருத்தந்தை ஆக்கினார். அவரை எதிர்-திருத்தந்தையாகக் கண்ட உரோமை மக்கள் ஐந்தாம் பெனடிக்டைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். இதை ஓட்டோ மன்னர் எதிர்த்தார். அவர் பெனடிக்டைப் பதவியிறக்கம் செய்தார். அதைப் பெனடிக்ட் ஏற்றார். இவ்வாறு எட்டாம் லியோ முறையான திருத்தந்தை ஆனார்.
பன்னிரண்டாம் யோவானுக்குப் பிறகு ஓட்டோ மன்னர் எட்டாம் லியோவைத் திருத்தந்தை ஆக்கினார். அவரை எதிர்-திருத்தந்தையாகக் கண்ட உரோமை மக்கள் ஐந்தாம் பெனடிக்டைத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தனர். இதை ஓட்டோ மன்னர் எதிர்த்தார். அவர் பெனடிக்டைப் பதவியிறக்கம் செய்தார். அதைப் பெனடிக்ட் ஏற்றார். இவ்வாறு எட்டாம் லியோ முறையான திருத்தந்தை ஆனார்.
இவர் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்பது பற்றி ஐயம் உள்ளது; எதிர்-திருத்தந்தையாகக் கருதப்படுகிறார்; சூத்ரியில் கூடிய சங்கம் இவரைப் பதவியிறக்கம் செய்தது.
ஒன்பதாம் லியோவும் கான்ஸ்தாந்திநோபுள் முதன்மை ஆயர் முதலாம் மிக்கேல் செருலாரியுசும் ஒருவரையொருவர் 1054இல் சபைநீக்கம் செய்தனர். இவ்வாறு கீழைச் சபைக்கும் மேலைச் சபைக்கும் இடையே "பெரும் பிளவு" உண்டாயிற்று.
இங்கிலாந்திலிருந்து வந்த முதல் திருத்தந்தை இவர். இவருக்குப் பிறகு இங்கிலாந்திலிருந்து யாரும் திருத்தந்தை ஆகவுமில்லை. இவர் அயர்லாந்தை இங்கிலாந்து அரசர் இரண்டாம் ஹென்றிக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இவர் புனித அகுஸ்தீன் சபையைச் சார்ந்தவர்.
1215இல் நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். நான்காம் சிலுவைப் போரைத் தொடங்கினார். எசுப்பானியா, போர்த்துகல் ஆகிய நாடுகளில் சமயக் கொள்கை விசாரணையைத் தொடங்கினார்.
1268 முதல் 1271 வரை சுமார் மூன்றாண்டு காலம் சட்டப்பூர்வமான திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்மார் இடையே ஒத்த கருத்து ஏற்படாததே இதற்குக் காரணம்.
13ஆம் நூற்றாண்டில் "யோவான்" என்ற பெயர்கொண்ட திருத்தந்தையரை எண்ணியதில் குழப்பம் ஏற்பட்டது. இருபதாம் யோவான் என்னும் பெயர்கொண்ட திருத்தந்தை ஒருவர் இருக்கவில்லை என்று பின்னர் தெரியவந்தது. இருபத்தொன்றாம் யோவான் மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அவர் தம் மருத்துவ சோதனைக் கூடத்தில் இருந்தபோது கூரை இடிந்துவிழுந்து இறந்துபோனார்.
1292 முதல் 1294 வரை சுமார் ஈராண்டு காலம் சட்டப்பூர்வமான திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்மார் இடையே ஒத்த கருத்து ஏற்படாததே இதற்குக் காரணம்.
அவிஞ்ஞோன் நகரில் தங்கிய திருத்தந்தை. 1311-1312இல் வியன்னா சங்கத்தைக் கூட்டினார். பிரான்சிய மன்னர் நான்காம் பிலிப்பு என்பவரின் வற்புறுத்தலின் காரணமாக, "கோவில் வீரர்கள்" என்னும் குழுவினரைத் துன்புறுத்தும் செயல் இவர் ஆட்சியில் தொடங்கியது.
1314 முதல் 1316 வரை சுமார் ஈராண்டு காலம் சட்டப்பூர்வமான திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்மார் இடையே ஒத்த கருத்து ஏற்படாததே இதற்குக் காரணம்.
196/3
7 ஆகஸ்ட் 1316 – 4 டிசம்பர் 1334 (18 ஆண்டுகள், 119 நாட்கள்)
B எட்டாம் இன்னசெண்ட், மற்றும் நான்காம் யூஜின் என்பவருக்கு முன் பதவியேற்ற ஏறக்குறைய அனைத்துத் திருத்தந்தையரின் பிறந்த நாள் துல்லியமாகத் தெரியவில்லை. எனவே கீழ்வரும் பட்டியலில் மிகக் குறைந்த ஊக வயது தரப்பட்டுள்ளது.
எண் வரிசை
காலம்
படம்
பெயர் (தமிழ்-இலத்தீன்)
இயற்பெயர்
பிறப்பிடம்
பணிக்காலத் தொடக்கத்தில் / முடிவில் வயது
குறிப்புகள்
204/1
17 அக்டோபர் 1404 – 6 நவம்பர் 1406 (2 ஆண்டுகள், 20 நாட்கள்)
யாரைத் திருத்தந்தையாக ஏற்பது என்பது குறித்து மேற்கு திருச்சபையில் பிளவு ஏற்பட்டது ("பெரும் பிளவு"); எதிர்-திருத்தந்தையாகிய இருபத்திமூன்றாம் யோவான் கூட்டிய கொன்ஸ்தான்ஸ் சங்கத்தின்போது பன்னிரண்டாம் கிரகோரி தம் பதவியை விட்டு விலகினார். எதிர்-திருத்தந்தையாகிய இருபத்திமூன்றாம் யோவானின் பெயரை இருபதாம் நூற்றாண்டில் திருச்சபையில் மறுமலர்ச்சி கொணரும் வண்ணம் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டிய திருத்தந்தையாகிய ஜியுசேப்பே ரொன்கால்லி அக்டோபர் 28, 1958இல் தமதாகத் தேர்ந்துகொண்டார்.
புனித அகுஸ்தீன் சபை உறுப்பினர். இவர் 1433இல் சிஜிஸ்முண்ட் என்பவரைப் புனித உரோமைப் பேரரசராக உரோமையில் முடிசூட்டினார். பாசல் சங்கத்தை ஃபெர்ராரா நகருக்கு மாற்றினார். பின்னர் அது கொள்ளைநோய் காரணமாக ஃப்ளோரன்ஸ் நகருக்கு மாற்றப்பட்டது.
208/5
6 மார்ச் 1447 – 24 மார்ச் 1455 (8 ஆண்டுகள், 18 நாட்கள்)
நான்காம் யூஜின் என்னும் திருத்தந்தையின் உடன்பிறப்பின் மகன்.
212/9
9 ஆகஸ்ட் 1471 – 12 ஆகஸ்ட் 1484 (13 ஆண்டுகள், 3 நாட்கள்)
ஆறாம் சிக்ஸ்டஸ்,(புனித பிரான்சிஸ்கு சபை) Papa XYSTUS Quartus
பிரான்சிஸ்கோ தெல்லா ரோவெரே
செல்லே லீகுரே, ஜேனொவா குடியரசு
57 / 70
இவர் பிரான்சிஸ்கு சபைத் துறவியாக இருந்தார். வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயம் உருவாக்கப் பணியைத் தொடங்கினார். எசுப்பானிய அரசர் பெர்டினாண்டு மற்றும் அரசி இசபெல்லா என்பவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் எசுப்பானிய யூத கிறித்தவர்கள் சமய விசாரணைக்கு உட்பட வேண்டுமென விதித்தார்.
213/10
29 ஆகஸ்ட் 1484 – 25 சூலை 1492 (7 ஆண்டுகள், 331 நாட்கள்)
இவர் மூன்றாம் கலிஸ்டஸ் என்னும் திருத்தந்தையின் உடன்பிறப்பின் மகன். இவரது பிள்ளைகள் சேசரே போர்ஜியா, லுக்ரேசியா போர்ஜியா ஆவர். 1493இல் இவர் பூமி உருண்டையில் ஐரோப்பாவுக்கு அப்பாற்பட்ட நாடுகளை மேற்கு, கிழக்கு என்று இரண்டாகப் பிரித்து, அவற்றோடு வணிகத் தொடர்பு கொள்ளவும் அவ்விடங்களில் கிறித்தவ சமயத்தைப் பரப்பவும் கத்தோலிக்க நாடுகளாகிய எசுப்பானியா, போர்த்துகல் ஆகிவற்றிடம் பொறுப்புக் கொடுத்தார். இந்தியா உட்பட்ட கிழக்கு நாடுகள் போர்த்துகல்லின் பொறுப்பில் விடப்பட்டன.
16 - 20ஆம் நூற்றாண்டுகள்
16ஆம் நூற்றாண்டு
எண் வரிசை
காலம்
படம்
பெயர் (தமிழ்-இலத்தீன்)
இயற்பெயர்
பிறப்பிடம்
பணிக்காலத் தொடக்கத்தில் / முடிவில் வயது
குறிப்புகள்
215/1
22 செப்டம்பர் 1503 – 18 அக்டோபர் 1503 (0 ஆண்டுகள், 26 நாட்கள்)
இவர் ஆறாம் சிக்ஸ்துஸ் என்னும் திருத்தந்தையின் உடன்பிறப்பின் மகன் ஆவார். இவர் 1512இல் ஐந்தாம் இலாத்தரன் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். வத்திக்கானில் தூய பேதுரு பெருங்கோவிலைக் கட்டுவதற்குத் தொடக்கத் திட்டங்கள் வரைந்தார். சிஸ்டைன் சிற்றாலயத்தில் சுவர் ஓவியங்கள் வரையும் பணியை மைக்கிலாஞ்சலோ என்னும் தலைசிறந்த ஓவியரிடம் ஒப்படைத்தார். முதன்முறையாக, திருத்தந்தை நாடுகள் என்று அழைக்கப்படும் நாட்டுப் பகுதியைத் தம் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
217/3
9 மார்ச் 1513 – 1 டிசம்பர் 1521 (8 ஆண்டுகள், 267 நாட்கள்)
இவர் லொரேன்சோ தே மேதிச்சி என்னும் ஆளுநரின் மகன் ஆவார். இவர் மார்ட்டின் லூதர் தவறான கொள்கைகளைப் பரப்பினார் என்று குற்றம் சாட்டி அவரைச் சபைநீக்கம் செய்தார். சமய விசாரணையை எசுப்பானியாவிலிருந்து போர்த்துகல்லுக்கு விரிவாக்கினார்.
218/4
9 ஜனவரி 1522 – 14 செப்டம்பர் 1523 (1 ஆண்டு, 248 நாட்கள்)
ஓலாந்து பகுதியிலிருந்து வந்த ஒரே டச்சு திருத்தந்தை இவர் ஆவார். இவருக்குப் பிறகு இத்தாலியரல்லாத திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் போலந்து நாட்டைச் சார்ந்த திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் (அருள் சின்னப்பர்) (ஆட்சிக்காலம்: 1978-2004) ஆவார். திருத்தந்தை நான்காம் ஹேட்ரியன் பிற்கால புனித உரோமைப் பேரரசு மன்னராகிய ஐந்தாம் சார்லஸ் என்பவருக்கு ஆசிரியராக இருந்தார்.
219/5
26 நவம்பர் 1523 – 25 செப்டம்பர் 1534 (10 ஆண்டுகள், 303 நாட்கள்)
இவர் பத்தாம் லியோ என்னும் திருத்தந்தையின் உறவினர் ஆவார். இவர் ஆட்சியின்போது 1527இல் பேரரசின் இராணுவம் உரோமை நகரைச் சூறையாடியது. இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் ஹென்றி தம் மனைவியாகிய கத்தரீனாவை விவாகரத்து செய்ய அனுமதி கோரியதை ஏழாம் கிளமெண்ட் ஏற்கவில்லை. 1530இல் பொலோஞ்ஞா நகரில் ஐந்தாம் சார்லசைப் பேரரசராக முடிசூட்டினார்.
220/6
13 அக்டோபர் 1534 – 10 நவம்பர் 1549 (15 ஆண்டுகள், 28 நாட்கள்)
1545இல் திரெந்து நகரில் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். இச்சங்கம் மார்ட்டின் லூதர் போன்ற சீர்திருத்தவாதிகளின் கொள்கைகளை ஆய்ந்தது. கத்தோலிக்க திருச்சபையில் சீர்திருத்தம் கொணர பல திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தியது. கிறித்தவக் கோட்பாடுகளுக்கு விளக்கம் அளித்தது.
221/7
7 பெப்ரவரி 1550 – 29 மார்ச் 1555 (5 ஆண்டுகள், 50 நாட்கள்)
இவர் சாமிநாதர் சபை உறுப்பினர். 1570இல் இங்கிலாந்து அரசியாகிய முதலாம் எலிசபெத்தை இவர் சபைநீக்கம் செய்தார். இவர் காலத்தில் 1571ஆம் ஆண்டு துருக்கிக் கடற்கரையில் அமைந்த லெப்பாந்தோ நகரில் நிகழ்ந்த போரில் கிறித்தவ நாடுகளின் ஐக்கியம் ஓட்டோமான் பேரரசின் கடற்படையைத் தோற்கடித்தது. இவ்வாறு, ஓட்டோமான் ஆட்சி ஐரோப்பாவில் பரவுவது தடுக்கப்பட்டது.
226/12
13 மே 1572 – 10 ஏப்ரல் 1585 (12 ஆண்டுகள், 332 நாட்கள்)
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கிறித்தவ மறையைப் பரப்பும்போது எந்த அளவுக்கு அந்நாடுகளின் கலாச்சாரத்தைத் தழுவுவது என்னும் விவாதம் இவர் காலத்தில் நிகழ்ந்தது.
18ஆம் நூற்றாண்டு
எண் வரிசை
காலம்
படம்
பெயர் (தமிழ்-இலத்தீன்)
இயற்பெயர்
பிறப்பிடம்
பணிக்காலத் தொடக்கத்தில் / முடிவில் வயது
குறிப்புகள்
244/1
8 மே 1721 – 7 மார்ச் 1724 (2 ஆண்டுகள், 304 நாட்கள்)
இவர் ஆட்சியின்போது 1789இல் பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. திருச்சபையும் திருத்தந்தை நாடுகளும் வன்மையாகத் தாக்கப்பட்டதை இவர் கண்டித்தார். எனவே பிரான்சிய இராணுவம் இவரை 1798இல் நாடுகடத்தியது. அதைத் தொடர்ந்து இவர் காலமானார்.
251/8
14 மார்ச் 1800 – 20 ஆகஸ்ட் 1823 (23 ஆண்டுகள், 159 நாட்கள்)
ஏழாம் பயஸ் (பத்திநாதர்), (ஆசீர்வாதப்பர் சபை) Papa PIUS Septimus
கமால்தொலேஸே சபை உறுப்பினராக இருந்தவர். ஆயர் நிலை இல்லாதிருந்து திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசித் திருத்தந்தை இவரே. இவர் காலத்திற்குப் பின் இன்றுவரை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவர் ஏற்கனவே ஆயராக இருந்தவரே ஆவர்.
255/4
16 ஜூன் 1846 – 7 பெப்ரவரி 1878 (31 ஆண்டுகள், 236 நாட்கள்)
ஒன்பதாம் பயஸ் (பத்திநாதர்), (பிரான்சிஸ்கன் பொதுநிலை உறுப்பினர்) Papa PIUS Nonus
இவர் முதல் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டப்போவதாக 1868இல் அறிவித்தார். சங்கம் 1869-1870இல் நடந்தது. அரசியல் குழப்பங்களின் பின்னணியில் ஒத்திவைக்கப்பட்டது. சங்கம் மீண்டும் கூடவில்லை. இச்சங்கத்தின் முக்கிய முடிவுகளில் ஒன்று திருத்தந்தையின் வழுவாவரம் பற்றியதாகும். அதாவது, திருத்தந்தை கிறித்தவ நம்பிக்கை மற்றும் நன்னடத்தை சம்பந்தமாகத் திருச்சபையினர் அனைவரும் ஏற்கவேண்டியதாக ஒரு போதனையை அதிகாரப்பூர்வமாக வழங்கும்போது அவர் தவறு இழைக்காவண்ணம் கடவுள் காப்பார் என்பதாகும். ஏறக்குறைய 31 ஆண்டுகள் இவர் திருத்தந்தைப் பணி ஆற்றி, மிக நீண்ட காலம் ஆட்சி செய்தவராக விளங்குகின்றார். இவர் காலத்தில் திருத்தந்தை நாடுகளை இத்தாலி கைப்பற்றிக் கொண்டது. திருத்தந்தை நாடுகளின் கடைசி ஆட்சியாளர் இவரே. நாடு பறிபோனாலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை இடமாக வத்திக்கான் என்னும் சிறு நிலப்பகுதி தொடர்ந்து இருந்தது. ஆயினும் இத்தாலி நாடு திருத்தந்தை நாட்டுப் பகுதியைத் தனியதிகாரம் கொண்ட நாடாக ஏற்க மறுத்ததால் திருத்தந்தை தம்மை "வத்திக்கான் கைதி" என்று கருதினார். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் செப்டம்பர் 3, 2000 ஆண்டில் இவரை "முத்திப்பேறு பெற்றவர்" என்னும் நிலைக்கு உயர்த்திச் சிறப்பித்தார்.
256/5
20 பெப்ரவரி 1878 - 20 ஜூலை 1903 (25 ஆண்டுகள், 150 நாட்கள்)
பதின்மூன்றாம் லியோ (சிங்கராயர்)பிரான்சிஸ்கன் பொதுநிலை உறுப்பினர் Papa LEO Tertius Decimus
தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி இவர் வெளியிட்ட சுற்றுமடல் "தொழிலாளர்களின் சாசனம்" என்று அழைக்கப்படுகிறது (1891). கட்டற்ற முதலாளியமும் பொதுவுடைமையும் மக்களுக்கு நன்மை பயப்பதில்லை என்றும், குடியரசு முறை ஏற்கத்தக்கது என்றும் இவர் கூறினார். 25 ஆண்டுகளுக்கு மேல் திருத்தந்தைப் பணியாற்றிய இவர் ஒன்பதாம் பயஸ் (31 ஆண்டுகள்), இரண்டாம் யோவான் பவுல் (26 ஆண்டுகள்) ஆகியோருக்கு அடுத்து, நீண்ட காலம் ஆட்சிசெய்த மூன்றாமவராக உள்ளார்.
20ஆம் நூற்றாண்டு
எண் வரிசை
காலம்
படம்
பெயர் (தமிழ்-இலத்தீன்)
இயற்பெயர்
பிறப்பிடம்
பணிக்காலத் தொடக்கத்தில் / முடிவில் வயது
குறிப்புகள்
257/1
4 ஆகஸ்ட் 1903 – 20 ஆகஸ்ட் 1914 (11 ஆண்டுகள், 16 நாட்கள்)
இவர் திரு இசையை ஊக்குவித்தார். கத்தோலிக்க வழிபாட்டில் பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். குறிப்பாக, நற்கருணை பக்தியை வளர்த்தார். கடைசியாக புனிதர் பட்டம் பெற்ற திருத்தந்தை இவரே.
258/2
3 செப்டம்பர் 1914 – 22 ஜனவரி 1922 (7 ஆண்டுகள், 141 நாட்கள்)
முதலாம் உலகப் போரின் போது நாடுகளிடையே அமைதி கொணர அரும்பாடு பட்டார். "அமைதியின் இறைவாக்கினர்" என்று இவரை இன்றைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் போற்றியுள்ளார்.
259/3
6 பெப்ரவரி 1922 – 10 பெப்ரவரி 1939 (17 ஆண்டுகள், 4 நாட்கள்)
சூன் 7, 1929இல் இத்தாலி அரசும் திருத்தந்தையும் உடன்படிக்கை செய்துகொண்டனர். இத்தாலி நாடு வத்திக்கான் நாட்டைத் தன்னுரிமை கொண்ட நாடாக ஏற்றது. திருத்தந்தை நாடுகளைக் கைப்பற்றியதற்கு ஈடாக இத்தாலி வத்திக்கானுக்குப் பொருளுதவி செய்ய முன்வந்தது. இந்த உடன்படிக்கை வத்திக்கானுக்குச் சொந்தமான இலாத்தரன் அரண்மனையில் கையெழுத்தானதால் இலாத்தரன் உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகச் செயல்பட்ட திருத்தந்தை தம் நாடுகளை இழந்துவிட்டபோதிலும் உலக அரங்கில் இன்று ஆன்மிகத் தலைவராக விளங்க வழிபிறந்தது.
260/4
2 மார்ச் 1939 – 9 அக்டோபர் 1958 (19 ஆண்டுகள், 221 நாட்கள்)
இவர் இரண்டாம் உலகப் போரின் போது அமைதிக் குரல் எழுப்பினார். நாசி ஆட்சியில் கொடுமைகளுக்கு ஆளான பல யூதர்களுக்கு வத்திக்கானில் தஞ்சம் அளித்தார். ஆயினும் யூதர்களைக் காப்பாற்ற இவர் மேலதிகம் செய்யவில்லை என்று சில யூத குழுக்கள் குறைகூறுகின்றன. இயேசுவின் அன்னை மரியா இவ்வுலக வாழ்வுக்குப்பின் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்னும் உண்மையை இவர் விசுவாச சத்தியமாக நவம்பர் 1, 1950இல் பிரகடனம் செய்தார்.
261/5
28 அக்டோபர் 1958 – 3 ஜூன் 1963 (4 ஆண்டுகள், 218 நாட்கள்)
தம் எழுபத்து ஆறாம் வயதில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அக்டோபர் 8, 1962இல் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். சங்கம் நடந்துகொண்டிருந்த போதே புற்றுநோய் காரணமாக உயிர்துறந்தார். ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைமையில் மேலை நாடுகளும் சோவியத் யூனியன் தலைமையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பனிப்போரில் ஈடுபட்டிருந்த நாட்களில் இவர் உலக அமைதிக்காக உழைத்தார். அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியையும் சோவியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். உலக அமைதியை வலியுறுத்தி "அவனியில் அமைதி" என்னும் சுற்றுமடலைத் தாம் இறப்பதற்கும் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார். 2000, செப்டம்பர் 3ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்.
262/6
21 ஜூன் 1963 – 6 ஆகஸ்ட் 1978 (15 ஆண்டுகள், 46 நாட்கள்)
இருபத்திமூன்றாம் யோவான் தொடங்கிவைத்த இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை நன்முறையில் நடத்தி இவர் டிசம்பர் 8, 1965இல் அதை நிறைவுக்குக் கொணர்ந்தார். சங்கத்தின் முடிவுகளைச் செயல்படுத்தினார். வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு உலகின் பல நாடுகளில் அமைதியின் தூதுவராகச் சென்றார். 1964இல் எருசலேம் சென்றார். அதே ஆண்டு இந்தியா சென்றார். 1965இல் ஐக்கிய நாடுகள் அவையில் உரையாற்றி, "போர் வேண்டாம்!" என்று முழக்கமிட்டார். கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தி குழந்தைப் பேற்றைத் தவிர்ப்பது முறையாகாது என்றும், இயற்கைமுறை மட்டுமே ஏற்புடையது என்றும் அவர் 1968இல் வழங்கிய போதனை சர்ச்சைக்கு உள்ளானது. சமூக நீதி பற்றி அவர் எழுதிய சுற்றுமடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
263/7
26 ஆகஸ்ட் 1978 – 28 செப்டம்பர் 1978 (0 ஆண்டுகள், 33 நாட்கள்)
தமக்கு முன் பணியாற்றிய இரு திருத்தந்தையரின் பெயர்களையும் இணைத்து இவர் தம் பெயராகக் கொண்டார். 33 நாட்களே பணிபுரிந்தாலும் இவர் தம் எளிமையான போக்கினால் மக்களின் மதிப்பையும் அன்பையும் பெற்றார்.
264/8
16 அக்டோபர் 1978 – 2 ஏப்ரல் 2005 (26 ஆண்டுகள், 168 நாட்கள்)
ஒன்பதாம் பயஸ் என்னும் திருத்தந்தைக்குப் பிறகு நீண்ட காலம் திருத்தந்தையாகப் பணிபுரிந்தவர் இவரே. போலந்து நாட்டிலிருந்து வந்த முதல் திருத்தந்தை இவர். இவருக்கு முன் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையாகப் பணியேற்றது 455 ஆண்டுகளுக்கு முன் ஆகும். இவர் பலருக்குப் புனிதர் பட்டம் கொடுத்து, அவர்களது வாழ்க்கையை மக்களுக்கு முன்மாதிரியாக அளித்தார். உலகின் ஏறக்குறைய எல்லா நாடுகளுக்கும் பயணம் சென்று மக்களுக்கு அமைதி, நீதி ஆகியவை பற்றி அறிவுரையும் கருத்துரையும் வழங்கினார். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து செயல்படுத்தினார். 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்.
21ஆம் நூற்றாண்டு
எண் வரிசை
காலம்
படம்
பெயர் (தமிழ்-இலத்தீன்)
இயற்பெயர்
பிறப்பிடம்
பணிக்காலத் தொடக்கத்தில் / முடிவில் வயது
குறிப்புகள்
265
19 ஏப்ரல் 2005 – 28 பிப்ரவரி 2013 (7 ஆண்டுகள், 315 நாட்கள்)
1057ஆம் ஆண்டுக்குப் பின், ஒன்பதாம் ஸ்தேவான் என்னும் செருமானியருக்குப் பிறகு, பதவி ஏற்ற முதல் செருமானிய நாட்டுத் திருத்தந்தை இவர். இவர் தலைசிறந்த இறையியல் அறிஞர். பல இறையியல் நூல்களை வெளியிட்டிருக்கிறார். சமய நம்பிக்கையில் வன்முறைக்கு இடமில்லை என்னும் கருத்தை வலியுறுத்தியபோது இசுலாம் பற்றி இவர் தெரிவித்த குறிப்பு இவருக்கு எதிர்ப்பைக் கொணர்ந்தது. பின்னர் அவர் இஸ்தான்புல் சென்றபோது "நீலப் பள்ளிவாசலுக்குள்" நுழைந்து அமைதியாக இறைவேண்டல் செய்தார். இவர் கத்தோலிக்க சமயத்தில் மரபுக் கொள்கைகளைப் பெரிதும் வலியுறுத்துகிறார். சமூக நீதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை பற்றி போதிக்கிறார்.
266
13 மார்ச் 2013 – 21 ஏப்ரல் 2025 (12 ஆண்டுகள், 39 நாட்கள்)
குறிக்கோள்: In illo Uno unum ("ஒன்றில், நாம் ஒன்று"), 12 ஆம் நூற்றாண்டில் ஏட்ரியன் IV-க்குப் பிறகு ஆங்கிலம் பேசும் நாட்டிலிருந்து முதல் போப். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிறந்த முதல் போப். அகஸ்டீனிய ஒழுங்கின் உறுப்பினர்; யூஜின் IV (1431–1447)-க்குப் பிறகு முதல் அகஸ்டீனிய போப்.
திருத்தந்தையர்களின் பட்டியலின் அமைப்பு குறித்த விளக்கம்
திருத்தந்தையர்களின் பெயர்களைத் தமிழில் ஆக்கும்போது மூல வடிவத்தின் ஒலிமுறை கையாளப்படுகிறது. சில பெயர்களுக்குக் கிறித்தவ மரபில் தமிழ் வடிவங்கள் ஏற்கனவே உள்ளன. அவை அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. அத்தகைய பெயர்களின் பட்டியல் கீழ்வருமாறு:
பெலிக்ஸ் என்னும் பெயருடைய திருத்தந்தையர்களின் வரிசை எண், எதிர் திருத்தந்தையர்களை சேர்க்காமல் கூடியதாகும்[4]
இருபதாம் யோவான் என்ற பெயரைக் கொண்ட திருத்தந்தையாக யாரும் இருக்கவில்லை. ஆதலால் 11ஆம் நூற்றாண்டில் சிறு குழப்பம் நிலவியது.[5]
ஸ்தேவான் (தேர்வான திருத்தந்தை) திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு ஆயர்நிலை திருப்பொழிவு பெறுவதற்கு முன் இறந்ததால் கத்தோலிக்க திருச்சபையின் பட்டியலில் திருத்தந்தையாக எண்ணப்படுவதில்லை.
மரீனுஸ் மற்றும் மார்ட்டின் என்னும் பெயர்களுக்கிடையே இருந்த குழப்பத்தால் "இரண்டாம்" மற்றும் "மூன்றாம்" வரிசை எண்களை விடுத்து நான்காம் மார்ட்டின் என்று ஒரு திருத்தந்தை பெயர் ஏற்றுக்கொண்டார்.[6]
இரண்டாம் டோனுஸ் என்னும் பெயரிலோ யோவான்னா என்ற பெயரிலோ திருத்தந்தையர் இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் இல்லை.[7]
இருபத்திமூன்றாம் யோவான் என்னும் பெயர் கொண்ட ஒரு எதிர்-திருத்தந்தை வரலாற்றில் இருந்த போதிலும் அதே பெயரைக் கர்தினால் ஜியுசேப்பே ரொன்கால்லி அக்டோபர் 28, 1958இல் தமதாகத் தேர்ந்துகொண்டார்.
↑மூன்றாம் கிளமெண்ட் இறந்த நாள், மற்றும் மூன்றாம் செலஸ்தீன் தேர்ந்தெடுக்க்ப்பட்ட நாள் பற்றிய தகவல்களுக்கு, காண்க: Katrin Baaken: Zu Wahl, Weihe und Krönung Papst Cölestins III. Deutsches Archiv für Erforschung des Mittelalters Volume 41 / 1985, pp. 203–211