திருவிளக்கு வழிபாடு
![]() திருவிளக்கு வழிபாடு என்பது இந்து மதத்தில் இடம்பெறும் ஒரு வழிபாட்டு முறையாகும். இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் வழிபாடு திருவிளக்கு வழிபாடாகும். வழிபாட்டு முறைகளும் நம்பிக்கைகளும்ஏற்ற நாள் நேரம்பொதுவாக பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த நற்பலன்களைத் தரவல்லது என நம்பப்படுகிறது. தமிழ் மாதங்களில் 12 மாதங்களிலும் திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும். அந்தந்த மாதங்களில் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும் பின்பற்ற வேண்டிய முறைகள்
திருவிளக்கேற்றும் பலன்கள்
திருவிளக்கில் பொட்டு வைக்கும் முறைதிருவிளக்கு வழிபாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் குத்துவிளக்கில் எட்டு இடங்களில் பொட்டு வைப்பர். உச்சியில் ஒரு பொட்டு, அதனை அடுத்து கீழே சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கும் பொருட்டு மூன்று பொட்டுக்கள், அதனையடுத்து தேவியின் கைகளாக கருதி இரண்டு பொட்டுக்கள், மற்றும் திருவடியில் ஒன்று என எட்டு பொட்டுக்கள் வைப்பர். திருவிளக்கேற்றும் திசைகள்
ஆகிய திசைகளில் மட்டுமே விளக்கேற்றுவர். திருவிளக்கை கிழக்கு முகமாக வைத்து, வழிபாடு செய்பவர் திருவிளக்கிற்கு வலப்புறமாக அல்லது வடக்கு நோக்கி அமருவர். தெய்வங்களும் எண்ணெய் வகைகளும்
திரிகளும், பயன்களும்திருவிளக்கிற்குப் பயன்படும் திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு விதமான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
விளக்கேற்றும் முறை
வேண்டிய பொருட்கள்திருவிளக்கு வழிபாட்டுக்கு திருவிளக்கு (குத்து விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கு), தேவையான எண்ணெய், சாம்பிராணி, கற்பூரம், கோலமிடுவதற்கு பச்சரிசி மாவு, வாழை இலை, சந்தனம், குங்குமம், மஞ்சள் பொடி, மாலை, அட்சதை அரிசி, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கிழங்கு, படையல் பொருட்கள், துணை விளக்கு, நீர்க்கடன் செலுத்தும் பாத்திரம், தாம்பாளம் மற்றும் அமர்ந்து கொள்வதற்கு சிறிய விரிப்பு போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. செய்யும் முறைகள்முதலில் வழிபாடு நடத்தும் இடத்தை மெழுகியும், விளக்கை நன்கு துலக்கியும் சுத்தமாக்கப்படும். வழிபாடு நடத்தும் முன்பு அவ்விடத்தில் தலைவாழை இலையை விரித்து, அதில் முனை முறியாத அரிசியைப் பரப்பி, அதன் மீது விளக்கை வைத்து சந்தனம், குங்குமம், பொட்டு வைத்து மலர்களால் அழகு செய்வர். பின்பு வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களை அருகில் வைத்துக் கொண்டு, விளக்கை வணங்கி விட்டு அமருவர். பின்பு கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுவர். அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றுவர். தீபம் ஏற்றும்போது ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி என்று சொல்லுவர். பின் ஊதுபத்தி ஏற்றி வைப்பர் விநாயகர் வழிபாடுமுதலில் விநாயகரை வழிபடவேண்டும் என்பது வழிபாட்டு மரபு என்பதால் மஞ்சளில் சிறிய விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையில் வைத்து அலங்கரிப்பர். பின்பு அம்பாள் துதிப்பாடல்கள் பாடியபடி வழிபாட்டைத் துவங்குவர். அருச்சனைஅம்பாள் வழிபாடு நடக்கிற போது 1008, 108 மந்திரங்களைச் சொல்லி வழிபடுகிற வேளையில் மலர் அல்லது குங்கும அர்ச்சனை நடைபெறும். அவ்வாறு அர்ச்சனை செய்கின்ற போது ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் இணைத்த நிலையில் குங்குமம் அல்லது மலரினையும் எடுக்க வேண்டும், மற்ற மூன்று விரல்களும் நீட்டிய நிலையில் அமைதல் வேண்டும். மந்திரங்களை உரிய முறையில் சொல்லி அருச்சிக்க வேண்டும் என்பது விதி. நூற்றியெட்டு போற்றிஅர்ச்சனை செய்து முடித்தவுடன் எல்லோரும் இருகரம் கூப்பி, திருவிளக்கில் சுடர்விடும் ஒளியை நோக்கி அம்பிகையை மனமார நினைத்து நூற்றி எட்டு போற்றிகளை ஓதுவர். படையல்நூற்றியெட்டு போற்றி ஓதி முடிந்தவுடன் படையல் பொருள்களை அம்மனுக்குக் காணிக்கையாக்குவர். தீபாராதனைஎல்லோரும் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று தீபாராதனைக்குத் தயாராகுவர். இப்போது திருவிளக்கிற்கு மூன்று முறை கற்பூரசோதி காண்பிக்கப்படும். கற்பூர சோதி காட்டும்போது சொல்லப்படவேண்டியது:. "திங்கள் ஜோதி நீ தினகரன் ஜோதி நீ| பின்பு திருவிளக்கின் முன் கற்பூர தட்டை வைத்தபடி கையில் மலரெடுத்து கற்பூர சோதியை வலம் சுற்றி திருவிளக்கிற்கு சாற்றி கற்பூர தீபத்தைத் தொட்டு வணங்குவர். வலம்வருதல்அனைவரும் பின்வருமாறு அம்பாள் பெயர் போற்றி கைதட்டிப் பாடிக்கொண்டு திருவிளக்கினை மூன்று முறை வலம் வருவர். மங்களம்மங்களம் பாடி நிறைவு செய்யப்படும். திருவிளக்கை அம்பாளாகக் கருதி, 16 முறை விழுந்து வணங்குவர். |
Portal di Ensiklopedia Dunia