அக்சோபிய தீர்த்தர்
அக்சோபிய தீர்த்தர் (Akshobhya Tirtha) ( அண். 1282- அண். 1365) இவர் ஓர் துவைத அறிஞரும் இறையியலாளரும் ஆவார். [1] இவர் ஒரு வலிமையான வாதத்திறமை வாய்ந்தவர். [2] இவர் விஜயநகர பேரரசு தழைத்தோங்கிய காலத்தில் இருந்த வித்யாரண்யர் மற்றும் வேதாந்த தேசிகரின் சமகாலத்தவராக கருதப்படுகிறார். [3] சந்நியாசம்கோவிந்த சாத்திரியாக பிறந்து, மத்துவரிடமிருந்து சந்நியாசத்தைப் பெற்றார். பின்னர் மாதவ தீர்த்தருகுப் பிறகு மத்வாசாரியரின் பீடத்தின் தலைவரானார் (1350 - 1365). பாரம்பரியமாக, இவர் வேதாந்த தேசிகர் நடுவராய் இருந்த ஒரு விவாதத்தில் வித்யாரண்யரை வென்றதாக அறியப்படுகிறது. [1] [2] மத்வ தந்திர சம்கிரகா என்ற பெயரில் இவர் படைத்த ஒரு படைப்பு தற்போது கிடைக்கவில்லை. [1] கடைசி ஆண்டுகள்இவர் தனது கடைசி ஆண்டுகளில் பண்டரிபுரம் சென்று ஓய்வு பெற்றார் என்று வரலாற்றாசிரியர் சர்மா வாதிடுகிறார். அங்கு பீமா ஆற்றங்கரையில் தோண்டு பந்த் என்ற இளைஞரை சந்தித்தார். பின்னர் அவர் இவரது சீடராகவும் வாரிசாகவும் மாறி ஜெயதீர்த்தர் என்ற பெயரைப் பெற்றார். [1] கர்நாடகாவில் உள்ள ஒரு நகரமான, குல்பர்கா மாவட்டத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மல்கெடாவில் இவரது பிருந்தாவனம் உள்ளது.. குறிப்புகள்
நூலியல்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia