அல்-றக்கா
அல்-றக்கா (அரபி: الرقة அர்-ரக்கா), அல்லது றக்கா, ரக்கா, அற்-றக்கா என்பது சிரியாவில் புறாத்து ஆற்றின் வட கரையில் அலெப்போவுக்கு கிட்டத்தட்ட 160 கிலோமீட்டர்கள் (99 மைல்கள்) கிழக்கே அமைந்துள்ள ஒரு நகராகும். இது சிரியாவிலேயே பெரிய அணைக்கட்டாகிய தப்கா அணையிலிருந்து 40 கிலோமீட்டர்கள் (25 மைல்கள்) கிழக்கே அமைந்துள்ளது. இந்நகர் பொ.கா. 796 முதல் 809 வரையான காலப் பகுதியில் கலீபா ஹாறூன் அல்-றசீதின் ஆட்சியின் போது அப்பாசிய கலீபகத்தின் தலைநகராக விளங்கியது. 2004 ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வக் கணக்கெடுப்பின் படி 220,488[1] பேர் வசிக்கும் இந்நகர் சிரியாவின் ஆறாவது பெரிய நகராகும். சிரிய உண்ணாட்டுப் போரின் போது இந்நகர் இசுலாமிய அரசினால் கைப்பற்றப்பட்டு சிரியாவில் அதன் தலைநகரமாக ஆக்கப்பட்டது. அதன் விளைவாக, இந்நகரின் மீது சிரிய அரசாங்கம், உருசியா, ஐக்கிய அமெரிக்கா, அறபு நாடுகள் என்பவற்றின் வான் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. நகரின் சுன்னி பிரிவைச் சேராத பெரும்பாலான கட்டிடங்கள், குறிப்பாக சீஆக்களின் உவைசுல் கர்னீ பள்ளிவாயல் இசுலாமிய அரசினால் அழிக்கப்பட்டன. வரலாறுகிரேக்க பைசாந்திய கல்லினிக்கோக்கள்அல்-றக்கா நகர் அமைந்திருக்கும் பகுதியில் மிகப் பழங்காலத்திலிருந்தே மனிதக் குடியிருப்புக்கள் இருந்து வருவது தல் சைதான், தல் அல்-பீஆ எனும் தொல்பொருட் களங்களின் மூலம் அறியப்படுகிறது. இவற்றில் பின்னையதே துத்துல் எனப்படும் பாபிலோனிய நகரென்று அடையாளங் காணப்படுகிறது.[2] இப்போதை நகரம் கிரேக்க மரபினரின் காலத்தில் பொ.கா.மு. 301-281 வரை ஆட்சி செய்த செலூக்கசு முதலாம் நிக்காத்தர் எனப்படும் செலூசிய மன்னரால் நிக்கபோரியொன் (கிரேக்க மொழி: Νικηφόριον) எனும் பெயரில் நிறுவியதாகும். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த (பொ.கா.மு. 246-225 வரை ஆண்ட) செலூக்கசு இரண்டாம் கல்லினிக்கசு எனும் அரசன் இந்நகரை விரிவாக்கி கல்லினிக்கோசு (Καλλίνικος என்று கல்லினிக்கம் (Callinicum) என்ற பெயரை இலத்தீன் மயப்படுத்தி இந்நகருக்கிட்டான்.[2] காலநிலை
போக்குவரத்துசிரிய உண்ணாட்டுப் போருக்கு முன்னர் இந்நகருக்கு சிரியத் தொடருந்துச் சேவை காணப்பட்டது. உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia