பழைய அசிரியப் பேரரசு (ஆட்சிக் காலம்:கிமு 2025 - கிமு 1378) (Old Assyrian Empire) அசிரிய மக்களின் நான்கு கால கட்டங்களில் இருந்த பேரரசுகளில் இரண்டாவதாகும். பிற மூன்று கால கட்டங்களில் இருந்த அசிரிய இராச்சியங்கள் பண்டைய அசிரியா, மத்திய அசிரியப் பேரரசு மற்றும் புது அசிரியப் பேரரசுகள் ஆகும். பழைய அசிரியப் பேரரசின் தலைநகராக அசூர் மற்றும் டெல்-லெய்லான் எனும் சுபாத்-என்லில் நகரங்கள் விளங்கியது. பழைய அசிரியப் பேரரசு கிமு 2025 முதல் 1378 முடிய ஆண்டனர்.
பழைய அசிரியப் பேரரரசு உச்சத்தில் இருந்த போது கிழக்கில் தற்கால ஆர்மீனியா, அஜர்பைஜன், மற்றும் ஈரான், ஈராக், சிரியா, தெற்கில் அரேபியத் தீபகற்பம், மேற்கில் சைப்பிரஸ், பண்டைய எகிப்து, பண்டைய லிபியா ஆகிய பகுதிகளில் அசிரியர்களின் ஆட்சியில் இருந்தது.[3]
முந்தைய அக்காடியப் பேரரசில் சிறு நகரமாக இருந்த அசூர் நகரத்தில் கிமு 2600ல் அசிரிய மக்கள் கோயில்கள், அரண்மனைகள், நகரச் சதுக்கங்கள் கட்டி, அதனை தமது இராச்சியத்திற்கு பெயராகவும், தலைநகரமாகவும் கொண்டனர்.
அசூர் நகரம் நிறுவுவதற்கு முன்னர் அசிரியாவை சுபர்த்து என்றும் சாசானியப் பேரரசில் அசோரிஸ்தான் எனவும் அழைக்கப்பட்டது.
மெசொப்பொத்தேமியாவில் கிமு 2450ல் அசிரியர்கள், சுமேரியர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
அசிரிய மக்களின் முதல் கோயிலை அசூர் நகரத்தில் அசிரியப் பேரரசர் உஷ்பியா கிமு 2050ல் நிறுவினார். பின்னர் நகரத்துடன் அசூர் கோயிலைச் சுற்றி கோட்டைச் சுவர்கள் எழுப்பப்பட்டது.
கிமு 2500 - 2400க்கு இடைப்பட்ட காலத்தில் கால்நடைகள் மேய்க்கும் நாடோடி இன மக்களாக இருந்த அசிரியர்கள், அனதோலியாவின் ஹட்டியர்கள் மற்றும் உரியர்கள், மற்றும் ஈலாம் பகுதியின் குடியன், லுல்லுபி மற்றும் அமோரிட்டு இன மக்களிடம் பகை பாராட்டினர்.[4]
கிமு 2400ல் சுமேரிய மக்கள் அக்காடியப் பேரரசின் அசிரிய-பாபிலோனிய குடிமக்கள் ஆயினர்.[5][6] கிமு 2025ல் அசிரியர்கள் மொசபதோமியாவில் பழைய அசிரியப் பேரரசை நிறுவினர்.
↑Woods C. 2006 "Bilingualism, Scribal Learning, and the Death of Sumerian". In S. L. Sanders (ed) Margins of Writing, Origins of Culture: 91–120 Chicago [1]பரணிடப்பட்டது 2013-04-29 at the வந்தவழி இயந்திரம்